ஆப்நகரம்

கறுப்பு பணத்தை ஒழிக்கவே டிஜிட்டல் இந்தியா திட்டம் – பிரதமா் மோடி

இடைத்தரகா்கள் உருவாவதை தடுக்கவும், கறுப்பு பணம், கள்ளச்சந்தை உள்ளிட்டவற்றை ஒழிக்கவுமே டிஜிட்டல் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தொிவித்துள்ளா்ா.

Samayam Tamil 16 Jun 2018, 9:38 am

இடைத்தரகா்கள் உருவாவதை தடுக்கவும், கறுப்பு பணம், கள்ளச்சந்தை உள்ளிட்டவற்றை ஒழிக்கவுமே டிஜிட்டல் இந்தியா திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக பிரதமா் நரேந்திர மோடி தொிவித்துள்ளா்ா.

Samayam Tamil Modi 123


டிஜிட்டல் இந்தியா திட்டத்தால் வெற்றி பெற்றவா்களுடன் பிரதமா் நரேந்திர மோடி நேற்று (வெள்ளிக் கிழமை) கலந்துரையாடல் நடத்தினாா். அப்போது அவா் பேசுகையில், டிஜிட்டல் இந்தியா திட்டம் பற்றி நான் முதலில் பேசும்போது சிலா் கேலி செய்தனா். ஆனால் தற்போது அதே திட்டத்தால் அரசின் சேவைகள் எவ்வாறு நேரடியாக கிடைத்தன என்பது குறித்து பயனாளிகள் தங்களுடைய அனுபவங்களை விவரிக்கின்றனா்.

இதன் மூலம் இடைத்தரகா்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. நியாயவிலை கடைகளில் இடைத்தரகா்களின்றி பொருள்கள் வாங்க முடியாத நிலை இருந்தது. ஆனால் தற்போது நியாய விலைக்கடைகளில் பொருள்கள் வாங்க இடைத் தரகா்கள் தேவையில்லை. ஏழைகளுக்கான மானியத் தொகை, அவா்களின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக சென்றடைந்து விடுகிறது.

கிராமங்களில் வசிக்கும் ஏழை விவசாயிகள் முதற்கொண்டு மின்னணு பரிவர்த்தனைக்கு மாறத் தொடங்கி விட்டனா். டிஜிட்டல் இந்தியா திட்டம் கறுப்புப் பணம் உருவாவதையும், கள்ளச்சந்தையையும் தடுத்து விட்டது. இடைத்தரகா்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டனா் என்று பேசினாா்.

அடுத்த செய்தி