ஆப்நகரம்

பெரிய கடன் வாங்கும் முதலாளிகளின் பெயரை வங்கிகள் வெளியிடாதது ஏன்? தகவல் ஆணையம் கேள்வி

சிறிய கடன் வாங்கிய விவசாயிகள் பெயரை வெளியிடும் வங்கிகள், பெரும் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத முதலாளிகள் பெயரையும் வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் வலியுறுத்தியுள்ளார்.

Samayam Tamil 30 Aug 2018, 7:52 pm
சிறிய கடன் வாங்கிய விவசாயிகள் பெயரை வெளியிடும் வங்கிகள், பெரும் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத முதலாளிகள் பெயரையும் வெளியிட வேண்டும் என்று மத்திய தகவல் ஆணையர் ஸ்ரீதர் வலியுறுத்தியுள்ளார்.
Samayam Tamil cic


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ‘நமது நாட்டில் விவசாயிகள் பலர் வங்கிகளில் கடன் பெற்று அதை முறையாக திருப்பி செலுத்துகிறார்கள். இருப்பினும், சில இயற்கை நிகழ்வுகள் காரணமாக விவசாயத்தில் நஷ்டம் ஏற்பட்ட அவர்கள் வாங்கிய கடன் திருப்பி செலுத்த முடியாத சூழல் ஏற்படுகிறது. ஆனால், வங்கிகளோ விவசாயிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கிறது. சிறிய அளவிலான தொகையை தான் கடனாக பெற்றாலும், அவர்களுடைய பெயரை வெளயிட்டு அசிங்கப்படுத்துகின்றன.

ஆனால், பெரும் முதலாளிகள் வங்கிகளில் பெரும் தொகையை கடனாகப் பெற்று விட்டு, திருப்பிச் செலுத்தாமல் உள்ளனர். அவர்களுக்கு கடனை திருப்பிச் செலுத்தும் அளவுக்கு தகுதியும் வசதியும் உள்ளது. அப்படி இருந்தும் அவர்கள் கடனை அடைக்காமல் உள்ளனர். வங்கிககளோ மத்திய அரசோ இது போன்ற பெரும் முதலாளிகளின் பெயர்களை வெளியிடுவதில்லை.

மாறாக, ஒன் டைம் செட்டில்மென்ட் என்ற பெயரில் கடன் வட்டி தள்ளுபடி உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகிறது. அவர்களின் பெயர்களை வெளியிடாமல் உள்ளனர். சிறிய கடன் வாங்கிய விவசாயிகள் பெயரை வெளியிடும் வங்கிகள், 50 கோடிக்கு மேல் கடன் வாங்கி திருப்பி செலுத்தாத முதலாளிகள் பெயரையும் வெளியிட வேண்டும். அவர்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். இதுவே நமது நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் கடமை ஆகும்’.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி