ஆப்நகரம்

கோவை கல்வி மையத்தில் மன ரீதியான சித்ரவதை; மோடிக்கு கடிதம் எழுதிய காஷ்மீரி மாணவர்

கல்வி மையத்தில் மன ரீதியான சித்ரவதை அளிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகத்திற்கு காஷ்மீரி மாணவர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.

TNN 26 May 2017, 9:32 pm
கோவை: கல்வி மையத்தில் மன ரீதியான சித்ரவதை அளிக்கப்பட்டதாக பிரதமர் அலுவலகத்திற்கு காஷ்மீரி மாணவர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
Samayam Tamil discrimination at salim ali centre kashmiri student writes to pmo
கோவை கல்வி மையத்தில் மன ரீதியான சித்ரவதை; மோடிக்கு கடிதம் எழுதிய காஷ்மீரி மாணவர்


கோவையில் உள்ள சேகான் எனப்படும் இயற்பியல் மற்றும் இயற்கை வரலாற்றுக்கான சலிம் அலி மையத்தில் காஷ்மீரி மாணவர் முகமது சீஷன் மாலிக்(27) ஒரு மாத கால பயிற்சிக்காக தங்கியுள்ளார். இந்நிலையில் அவர் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம், வனம், சுற்றுப்புறம் மற்றும் பருவநிலை மாறுபாட்டு அமைச்சகம், பிரதமர் அலுவலகம் ஆகியவற்றிற்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தனக்கு கோவை கல்வி நிலையத்தில் மன ரீதியான சித்ரவதை அளிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் காஷ்மீரைச் சேர்ந்தவன் என்பதால், அதிகப்படியான தொந்தரவு அளிக்கப்பட்டதாகவும் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக முன்னரே மெஹபூபா முப்தி அரசுக்கு தகவல் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். சேகான் கல்வி மையத்தில் தான் திறம்பட செயல்பட்டதாகவும், அதற்காக பெருமைப்படுவதாகவும் கூறினார். ஆனால் அங்கு நடைபெற்ற மிக மோசமான சம்பவங்களால், அவர் மீண்டும் அங்கு செல்லவில்லை. தனக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் வேறு எந்த ஒரு மாணவருக்கும் நேரக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.

Kashmiri student Mohammed Zeeshan Malik, who alleged discrimination at Salim Ali Centre for Ornithology and Natural History (SACON) in Coimbatore, has written to PMO.

அடுத்த செய்தி