ஆப்நகரம்

உரி தாக்குதல் எதிரொலி: சீனப் பொருட்கள் விற்பனை 40% சரிவு

சீனப் பொருட்கள் வாங்குவதை தவிர்க்குமாறு சமூக வலைத்தளங்களில் எழுந்த குரலை அடுத்து, அதன் விற்பனை 40 சதவிகிதம் வரை சரிந்துள்ளது.

TNN 22 Oct 2016, 2:57 pm
ஜெய்ப்பூர்: சீனப் பொருட்கள் வாங்குவதை தவிர்க்குமாறு சமூக வலைத்தளங்களில் எழுந்த குரலை அடுத்து, அதன் விற்பனை 40 சதவிகிதம் வரை சரிந்துள்ளது.
Samayam Tamil diwali chinese goods sale dips 40 after boycott call
உரி தாக்குதல் எதிரொலி: சீனப் பொருட்கள் விற்பனை 40% சரிவு


உரி தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதையடுத்து இருநாடுகளிடையே பதற்றமான சூழல் உருவானது. இந்நிலையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்படும் சீனாவின் பொருட்களை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் குரல் எழுத் தொடங்கியது.

தீபாவளி நெருங்குவதை ஒட்டி, பட்டாசுகள், அலங்கார பொருட்கள் விற்பனை சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் சீன தயாரிப்புகள் மீதான பொதுமக்களின் ஆர்வம் குறைவால், அதன் விற்பனை 30-40% வரை சரிந்துள்ளதாக கூறப்படுகிறது. சீன எலக்ட்ரானிக் பொருட்களின் விற்பனை 10-15% வரையும், மொபைல் போன்களின் விற்பனை 2% வரையும் பாதிக்கப்பட்டுள்ளது.

சீன பொருட்கள் மீதான மோகம் குறைந்ததால், வியாபாரிகளும் வாங்குவதை குறைத்துக் கொண்டு வருகின்றனர். இனி சீன பொருட்கள் நமக்கு எதற்கு என்றும், இந்தியப் பொருட்கள் மட்டுமே வாங்குவோம் என்றும் ஜெய்ப்பூரை சேர்ந்த பொறியாளர் ஒருவர் கூறியுள்ளார்.

Diwali 2016: Chinese goods sale dips 40% after boycott call.

அடுத்த செய்தி