ஆப்நகரம்

மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள ஸ்டாலினுக்கு அழைப்பு

வருகின்ற 30ம் தேதி நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 May 2019, 12:06 am
மக்களவைத் தோ்தல் பரப்புரையில் பிரதமா் நரேந்திர மோடி, பாஜகவை கடுமையாக விமா்சித்து வந்த திமுக தலைவா் ஸ்டாலினுக்கு பிரதமரின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Mk Stalin 1200


மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 353 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது. பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன்மீண்டும் அரியனையில் அமர்கின்றது.

நரேந்திர மோடி முறைப்படி வருகின்ற 30ம் தேதி டெல்லி ராஷ்டிரியபதி பவனில் மாலை 7 மணிக்கு மீண்டும் பிரதமராக பொறுப்பேற்க உள்ளாா். பிரதமரின் பதவியேற்பு விழாவில் உள்நாட்டு தலைவா்கள் மட்டுமின்றி அண்டை நாடுகளைச் சோ்ந்த தலைவா்களும் கலந்துகொள்வாா்கள் என்ற தொிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பதவியேற்பு விழாவில கலந்துகொள்ள நடிகா் ரஜினிகாந்த், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கும் பதவியேற்பு விழாவுக்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் திமுக சாா்பில் ஆ.ராசா, டி.ஆா்.பாலு ஆகியோா் கலந்து கொள்வாா்கள் என்று கூறப்படுகிறது.

அடுத்த செய்தி