ஆப்நகரம்

ஹலோ துரைமுருகன், நீங்க எங்க இந்தப் பக்கம்?

திமுக பொருளாளரும், எம்.எல்.ஏவுமான துரைமுருகன் நாடாளுமன்றத்திற்கு சென்றுள்ள புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 19 Nov 2019, 1:00 pm
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. வரும் டிசம்பர் 13ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற மக்களவை தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
Samayam Tamil Duraimurugan


இதையடுத்து அந்த தொகுதிக்கு மட்டும் ஆகஸ்ட் மாதம் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக சார்பில் போட்டியிட்ட கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

எங்கே போனது “தமிழ் வாழ்க” கதிர் ஆனந்த்...?

இவர் திமுக பொருளாளரும், காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகனின் மகன் ஆவார். நேற்று நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் கதிர் ஆனந்த் எம்.பியாக பதவியேற்றுக் கொண்டார்.

அவருக்கு சபாநாயகர் ஓம் பிர்லா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இதைக் காண கதிர் ஆனந்தின் தந்தை துரைமுருகன் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் சபைக்கு வந்திருந்தனர்.

சர்ச்சையை கிளப்பிய ’மார்ஷல்’ சீருடை மாற்றம்; சபாநாயகர் அளித்த பதில் என்ன தெரியுமா!

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் திமுக எம்.பிக்கள் உடன் துரைமுருகன் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் தயாநிதி மாறன், திருச்சி சிவா, சண்முகம், வில்சன், டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

அவர்கள் மத்தியில் அமர்ந்து கொண்டு துரைமுருகன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகி உள்ளது.

மாநிலங்களவையில் வரலாற்று சிறப்புமிக்க தருணம்- 250வது கூட்டத்தொடரில் மோடி பெருமிதம்!

அடுத்த செய்தி