ஆப்நகரம்

கட்டிப்பிடித்து எலும்பை நொறுக்கிய நண்பன்

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த நண்பனை கட்டிப்பிடித்ததால் அவரின் விலா எலும்பு நொறுங்கியுள்ளது.

Samayam Tamil 21 Mar 2017, 8:21 pm
மகாராஷ்டிரா மாநிலத்தின், அவுரங்கப்பாத்தில் உள்ள அரசு மெடிக்கல் மற்றும் மருத்துமனையில் கடந்த 1990ம் ஆண்டு மதுகர் ஹைக்வாட் மற்றும் அமித் பாட்வே ஆகிய இருவரும் டாக்டர் படிப்பை முடித்துள்ளனர். இதில் டாக்டர் அமித் பாட்வே உடற்பயிற்சி முடித்துவிட்டு அஹமதுநகர் மாவட்டத்தில் தனியாக மையற்சி மையத்தை தொடங்கிவிட்டார். ஹைக்வாட் அவுரங்காபாத்தில் உள்ள ஜேஜே மருத்துவமனையில் பணியில் சேர்ந்தார். இதன் காரணமாக இருவரும் சந்திப்பதற்கான வாய்ப்பு அமையவில்லை.
Samayam Tamil doctor cracks his ribs after getting a tight hug from longtime friend
கட்டிப்பிடித்து எலும்பை நொறுக்கிய நண்பன்


இந்நிலையில் மூன்று வருடங்களுக்குப் பிறகு, ஹைக்வாடேவை சந்திக்க அமித் பாட்வே மருத்துவனைக்கு வந்துள்ளார். நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவருக்கொருவர் சந்திப்பதால், இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டனர். இதில், ஹைக்வாடேவுக்கு மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஹைக்வாடே கூறுகையில், நீண்ட நாட்களுக்குப் பிறகு எனது நண்பரை சந்தித்த மகிழ்ச்சியில் உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்திருப்பதற்குள் உடனே வந்து என்னை கட்டிப்பிடித்துவிட்டார். இதில் எனக்கு மூன்று இடங்களில் விலா எலும்பு நொறிங்கிவிட்டது என்று கூறியுள்ளார். இதனால், தொடர்ந்து 15 நாட்களுக்கு மருத்துமனையில் ரெஸ்ட் எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது விபத்தினால் ஏற்பட்டுவிட்டது. மற்ற காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என்று ஹைக்வாடே தெரிவித்துள்ளார்.

A doctor ended up cracking his ribs after he got a surprise hug from his batchmate.

அடுத்த செய்தி