ஆப்நகரம்

2ஜி வழக்கில் இப்படியொரு முடிவு; எனக்கு எந்த வருத்தமும் இல்லை- வினோத் ராய்!

அலைக்கற்றை முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணையில் முதல் முறையாக தனது கருத்தை வினோத் ராய் வெளிப்படுத்தி உள்ளார்.

Samayam Tamil 9 Sep 2019, 2:16 pm
கடந்த 2004 முதல் 2009 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடி மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சிபிஐ மற்றும் சிஏஜி வழக்கு தொடர்ந்தன.
Samayam Tamil Vinod Rai


இந்த வழக்கை விசாரித்த டெல்லி சிபிஐ நீதிமன்றம், குற்றத்தை நிரூபிக்க சிபிஐ மற்றும் மத்திய கணக்கு தணிக்கை அதிகாரி ஆகியோர் தவறி விட்டதாக தீர்ப்பு கூறியது. இதையடுத்து வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்ட 17 பேரையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விடுதலை செய்து உத்தரவிடப்பட்டது.

சாதித்தாரா மோடி... 100 நாள் சாதனைகள் என்னவானது?

நடக்காத ஒரு விஷயத்தை நடந்ததாகக் கூறி, கற்பனையாக தரவுகளை உருவாக்கி ஊழல் நிகழ்ந்ததாக முறையிட்டுள்ளனர் என நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 2ஜி அலைக்கற்றை முறைகேட்டு வழக்கில் சிஏஜி அதிகாரியாக இருந்தவர் வினோத் ராய்.

இவர் இந்த வழக்கு முடிவுக்கு வந்து 9 மாதங்களுக்கு பிறகு, மனம் திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த வினோத் ராய், இழப்பீடு குறித்து கணக்கிடுவதில் சிஏஜி விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணை முற்றிலும் மாறுபட்டது.

எனக்கு ட்விட்டரில் கணக்கே இல்லை: இஸ்ரோ தலைவர் சிவன்

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக எனது தலைமையில் சிஏஜி நடத்திய விசாரணையில் எந்தவித தவறும் இல்லை. எங்களது பணி அரசின் ஆவணங்கள் மூலம் தரவுகளை சரிபார்ப்பது. நாங்கள் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் கணக்கிட்ட இழப்பு மிகவும் சரியானது.

ஆ.ராசா உள்ளிட்டவர்கள் விடுவிக்கப்பட்டதற்கு, எனக்கு எந்த வருத்தமும் கொள்ளவில்லை. சிபிஐ நடத்திய விசாரணையின் அடிப்படையில் தான் சிபிஐ நீதிமன்றம் வழக்கை முன்னெடுத்து சென்றது. ஆனால் இறுதியில் சிபிஐ தரப்பே உரிய ஆதாரங்களை சமர்பிக்க தவறிவிட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது என்று கூறினார்.

எப்படி இருக்கிறது லேண்டர்? நிலவின் அருகே செல்லும் ஆர்பிட்டர்- இஸ்ரோ தீவிரம்!

அடுத்த செய்தி