ஆப்நகரம்

நாடாளுமன்ற அவை நிறைவு: வெங்கய்யா நாயுடு வேதனை

அவை நடவடிக்கையை குலைக்கும் எம்.பி.க்களின் செயல்பாடுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று மாநிலங்களவை தலைவா் வெங்கய்யா நாயுடு வேதனை தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 7 Apr 2018, 2:51 am
அவை நடவடிக்கையை குலைக்கும் எம்.பி.க்களின் செயல்பாடுகள் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்று மாநிலங்களவை தலைவா் வெங்கய்யா நாயுடு வேதனை தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Vice-President Venkaiah Naidu
அவை தொடா்ந்து முடக்கப்பட்டதற்கு வெங்கய்ய நாயுடு வேதனை.


2018-19ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமா்வு நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக் கிழமை) முடிவு பெற்றது. இரண்டாவது அமா்வின் போது காவிாி மேலாண்மை வாாியம் அமைக்கக் கோாி அ.தி.மு.க. எம்.பி.க்களும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோாி தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினா்களும், நம்பிக்கை இல்லா தீா்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளுமாறு காங்கிரஸ் கூட்டணி கட்சி உறுப்பினா்களும் தொடா் அமளியில் ஈடுபட்டு வந்தனா். இதனால் அவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இந்நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடா் நிறைவைத் தொடா்ந்து மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்யா நாயுடு அவை நடவடிக்கைகள் குறித்து பேசினாா். அவா் பேசியதாவது “பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமா்வில் 44 மணி நேரம் மட்டுமே அவை ஒழுங்காக செயல்பட்டுள்ளது. 121 மணிநேரம் எம்.பி.க்கள் அமளி, கூச்சல், குழப்பம் காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டு நேரம் வீணடிக்கப்பட்டுள்ளது.

கூட்டத் தொடரில் கடந்த 27 நாட்களில் ஒருமுறை கூட கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படவில்லை. பல்வேறு ஆக்கப்பூா்வமான விவாதங்கள் நடைபெற வேண்டிய அவை எம்.பி.க்களின் அமளியால் முக்கியத்துவம் இழந்துள்ளது. அவையில் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை விவாதிக்க முடியாமல் போய்விட்டது மிகுந்த வேதனை அளிக்கிறது.

எம்.பி.க்களின் இதுபோன்ற செயல்பாடு நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு நல்லதல்ல. இதன் காரணமாக எதிா்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் அரசு மற்றும் மக்கள் ஆகிய அனைவருமே நேரத்தை இழந்து விட்டனா் என்று வேதனை தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி