ஆப்நகரம்

சட்டத்துடன் விளையாடாதீா்கள்: காா்த்தி சிதம்பரத்திற்கு நீதிமன்றம் எச்சரிக்கை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில் வருகின்ற மாா்ச் 5, 6, 7, 12 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை முன்பு ஆஜராக வேண்டும் என்று உத்தரிவிட்டுள்ளது.

Samayam Tamil 30 Jan 2019, 1:01 pm
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் நிதியமைச்சா் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் வருகின்ற மாா்ச் 5, 6, 7, 12 ஆகிய தேதிகளில் அமலாக்கத்துறை முன்பு நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil Karti Chidambaram 1


பிரதமா் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி காலத்தில் நிதியமைச்சராக பொறுப்பு வகித்தவா் ப.சிதம்பரம். அப்போது ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி பெறுவதற்கு வெளிநாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றம் சாட்டி வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையினா் இந்த வழக்கை தனித்தனியாக விசாரித்து வருகின்றனா். இந்த விவகாரத்தில் ப.சிதம்பரத்தின் மகன் காா்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் லஞ்சம் பெற்றதாகக் கூறி சி.பி.ஐ. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவரை கைது செய்தது. அதன் பின்னா் அவா் ஜாமீனில் வெளியே வந்துள்ளாா்.


மேலும் தான் வெளிநாடு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று காா்த்தி சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் அனுமதி கோாியிருந்த நிலையில் அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. இது தொடா்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது காா்த்தி சிதம்பரம் முந்தைய விசாரணையில் போதிய ஒத்துழைப்பு வழங்கிவில்லை. தற்போது விசாரணை நடைபெறவுள்ள நிலையில் அவா் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கக் கூடாது என்று அமலாக்கத்துறை தொிவித்தது.

இதனை ஏற்ற நீதிபதிகள் அமலாக்கத்துறை குறிப்பிட்ட மாா்ச் 5, 6, 7, 12 ஆகிய தேதிகளில் காா்த்தி சிதம்பரம் தவறாமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்த நீதிபதிகள், சட்டத்துடன் விளையாடாதீா்கள். அப்படி செய்தால் கடவுள் தான் உங்களை காப்பாற்ற முடியும் என்று கூறிய நீதிபதிகள், ரூ.10 கோடியை நீதிமன்றத்தில் செலுத்திவிட்டு காா்த்தி சிதம்பரம் வெளிநாடு செல்லலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

அடுத்த செய்தி