ஆப்நகரம்

அரசு வேலை தேடி இளைஞர்கள் அலைய வேண்டாம்; பீடா கடை போடுங்கள்: திரிபுரா முதல்வர் அட்வைஸ்!

இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு திரிபுரா முதல்வர் புதிய அட்வைஸ் தந்துள்ளார்.

Samayam Tamil 29 Apr 2018, 7:51 pm
அகர்தலா: இளைஞர்களின் வேலைவாய்ப்பிற்கு திரிபுரா முதல்வர் புதிய அட்வைஸ் தந்துள்ளார்.
Samayam Tamil Tripura CM
திரிபுரா முதல்வர்


திரிபுரா மாநிலம் அகர்தலாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதல்வர் பிப்லப் குமார் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், இளைஞர்கள் அரசு வேலை தேடி அரசியல்வாதிகள் பின்னால் அலைய வேண்டாம்.

இதனால் உங்களின் நேரம் வீணடிக்கப்படுகிறது. மேலும் விவசாயம், பன்றி வளர்ப்பு போன்றவற்றால் தங்கள் தகுதி குறைந்துவிடும் என்று எண்ணுகின்றனர். எனவே பீடா கடை வைத்தால் கூட, இளைஞர்களின் வங்கிக் கணக்கில் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் இருந்திருக்கும்.

இது வரும் ஆண்டுகளில் இரட்டிப்பாகும் என்று கூறினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன், மகாபாரத காலத்தில் திருதிராஷ்டர் மூலம் இண்டர்நெட் பயன்பாடு இருந்ததாக குறிப்பிட்டார்.

முன்னாள் உலக அழகி டயானா ஹை டனுக்கு வியாபார நோக்கத்திற்காக உலக அழகி பட்டம் தரப்பட்டது என்று கூறினார்.

மேலும் சிவில் இன்ஜினியர்கள் படித்தவர்கள் ஆட்சியர் பணிக்கு வர வேண்டும் எனக் கூறி தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.

Don’t run behind us for govt jobs, set up ‘paan shop says Tripura CM Biplab Deb.

அடுத்த செய்தி