ஆப்நகரம்

அதிநவீன ஆயுத சோதனை வெற்றி!

ஒடிசாவில் நடத்தப்பட்ட அதிநவீன ஆயுத சோதனை வெற்றி பெற்றதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.

TOI Contributor 25 Dec 2016, 6:19 am
சண்டிபூர்: ஒடிசாவில் நடத்தப்பட்ட அதிநவீன ஆயுத சோதனை வெற்றி பெற்றதாக இந்திய ராணுவம் அறிவித்துள்ளது.
Samayam Tamil drdo successfully tests smart anti airfield weapon system in odisha
அதிநவீன ஆயுத சோதனை வெற்றி!


ஒடிசாவின் சண்டிபுரில் இந்திய ராணுவ மேம்பாட்டு, ஆராய்ச்சி நிறுவனம் தயாரித்த அதிநவீன ஆயுதம், 24-12-16 சோதனை செய்யப்பட்டது. 100 கிலோ மீட்டர் தொலைவில் விமானத்தில் இருந்து இலக்குகளை துல்லியமாக ரேடார் மூலம் கணித்து தாக்கும் வல்லமை கொண்டது இந்த ஆயுதம். இந்த சோதனை வெற்றி பெற்றதாக இந்திய ராணுவம் தெரிவித்தது.

இதுதொடர்பாக இந்திய ராணுவ மேம்பாட்டு, ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்த ஆயுதத்தின் எடை 120 கிலோ ஆகும். இந்த ஆயுதம் எதிர்பார்ப்பை பூர்த்தி செயதுள்ளது திருப்திகரமாக உள்ளது' என தெரிவிக்கப்பட்டது. இதை தயாரிக்க மத்திய அரசு கடந்த 2013ல் ரூ.56 கோடியே 58 லட்சம் ஒதுக்கியது.

India successfully tested on Saturday the smart anti-airfield weapon system, capable of engaging ground targets in a range of 100km from a fighter aircraft, at the integrated test range here in Chandipur.

அடுத்த செய்தி