ஆப்நகரம்

ஆளில்லா விமானத்தில் வைத்து ரத்தம் கொண்டு சென்ற மருத்துவர்கள்

இந்தியாவிலேயே முதல் முறையாக, உத்தரகாண்டில் ரத்தப் பரிசோதனைக்காக ட்ரோன் மூலம் ரத்தம் கொண்டு சென்று மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Samayam Tamil 10 Jun 2019, 7:39 pm
இந்தியாவிலேயே முதல் முறையாக, உத்தரகாண்டில் ரத்தப் பரிசோதனைக்காக ட்ரோன் மூலம் ரத்தம் கொண்டு சென்று மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
Samayam Tamil ஆளில்லா விமானத்தில் வைத்து ரத்தம் கொண்டு சென்ற மருத்துவர்கள்
ஆளில்லா விமானத்தில் வைத்து ரத்தம் கொண்டு சென்ற மருத்துவர்கள்

உத்தரகாண்ட் மாநிலம் நந்தகான் மாவட்ட மருத்துவமனையில் இருந்து, 32 கிலோமீட்டர் தொலைவில் உள்ள டெஹ்ரி மாவட்ட மருத்துவமனைக்கு டிரோன் மூலம் ரத்த மாதிரி அனுப்பிவைக்கப்பட்டது.

போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட இடையூறுகள் இன்றி டிரோன் மூலம் 18 நிமிடங்களில் டெஹ்ரி மாவட்ட மருத்துவமனைக்கு ரத்த மாதிரி வந்து சேர்ந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த முறை மேலும் விரிவுபடுத்தப்படும் போது வாகனப் போக்குவரத்து இல்லாத கிராம மக்களும் பயன்பெற முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி