ஆப்நகரம்

விமான நிறுவனங்களுக்கு ரூ. 50,000 அபராதம்!

பறக்கும் போது மனிதக் கழிவுகளைக் கொட்டும் விமானங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று விமானப்போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Samayam Tamil 2 Sep 2018, 6:36 pm
பறக்கும் போது மனிதக் கழிவுகளைக் கொட்டும் விமானங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று விமானப்போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Samayam Tamil flight


கடந்த 2016ம் ஆண்டு டெல்லியில் விமான நிலையம் அருகே குடியிருக்கும் ஒருவர், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், விமானங்கள் பறக்கும் போது மனிதக்கழிவுகளைக் கொட்டுவதாகவும், அது தனது வீட்டின் மீது விழுவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், இது குறித்து பல முறை புகார் அளித்தும் இந்த செயல்கள் தொடர்ந்து நடப்பதாக கூறியுள்ளார்.

இது குறித்து விசாரணை நடத்திய பசுமைத் தீர்ப்பாயம், விமான ஒழுங்குமுறைக் குழுவிடம் ஆய்வு நடத்த உத்தரவிட்டது. ஆனால், ஒழுங்குமுறைக் குழு இந்த குற்றச்சாட்டை மறுத்தது.

பின்னர், விமானங்கள் ஒழுங்குமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, பறக்கும் போது மனிதக் கழிவுகளைக் கொட்டும் விமானங்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று விமானப்போக்குவரத்து இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அடுத்த செய்தி