ஆப்நகரம்

நாளை முதல் பேருந்துகள் ஓடாது: கொரோனா அதிகரிப்பால் அதிரடி நடவடிக்கை!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் காரணத்தால் பேருந்து போக்குவரத்து தடை செய்யப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது

Samayam Tamil 17 Mar 2021, 11:53 pm

ஹைலைட்ஸ்:

  • மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்து நிறுத்தம்
  • ஜிம்கள், விளையாட்டு கிளப்கள், விளையாட்டு மைதானங்களும் நாளை முதல் மூடல்
  • கொரோனா அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil பேருந்து போக்குவரத்து
பேருந்து போக்குவரத்து
அண்மை காலங்களில் உலக அளவில் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல மாநிலங்களில் நோய்த் தொற்று மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, மகாராஷ்டிரா, குஜராத், கேரளா, கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கில் கொரோனா தொற்று பதிவாகி வருகிறது.
இதனால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் ஊரடங்கு விதிக்கலாமா என சில மாநில அரசுகள் பரிசீலித்து வருகின்றன. குறிப்பிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு, பகல் நேரக் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவைகள் ஏற்கனவே அமல்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், நாளை முதல் (18.03.21) மறு உத்தரவு வரும் வரை பேருந்து போக்குவரத்தை நிறுத்தி (AMTS, BRTS) வைத்து குஜராத் மாநிலம் அகமதாபாத் மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அகமதாபாத் நகரத்தில் உள்ள அரசு, தனியார் ஜிம்கள், விளையாட்டு கிளப்கள், விளையாட்டு மைதானங்களும் நாளை முதல் மறு உத்தரவு வரும் வரை மூடுவதற்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா 2வது அலை; மீண்டும் ஊரடங்கு வருமா? மத்திய அரசு முடிவு இதுதான்!
முன்னதாக, குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய நான்கு நகரங்களிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த உத்தரவு வரும் 31ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி