ஆப்நகரம்

அதிர்ச்சியூட்டும் காலைப் பொழுது; கர்நாடகா, ஜார்க்கண்ட்டில் நிலநடுக்கம் - பாதிப்பு எப்படி?

இரண்டு மாநிலங்களில் இன்று காலை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்தனர்.

Samayam Tamil 5 Jun 2020, 8:46 am
இயற்கை சீற்றங்கள் எப்போது நிகழும் என்று யாராலும் கணித்து கூற முடியாது. நாம் தான் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். இந்நிலையில் கர்நாடக மாநிலம் ஹம்பி மாவட்டத்தில் இன்று காலை 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0ஆக பதிவாகியுள்ளது. மிதமான நிலநடுக்கத்தால் கட்டடங்கள் லேசான குலுங்கின. இதனை உணர்ந்த பொதுமக்கள் உடனே வீடுகளில் இருந்து வெளியே ஓடிவந்தனர். பலரும் பாதுகாப்பு இடங்களை நோக்கி தஞ்சமடைந்தனர்.
Samayam Tamil கர்நாடகாவில் நிலநடுக்கம்


இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் மாவட்டத்திலும் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.7ஆக பதிவாகியுள்ளது. இந்த இரு பகுதிகளுக்கும் இடையே சுமார் 2,000 கிலோமீட்டர் தூரம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

முதல்முறை இப்படியொரு அதிர்ச்சி; இந்தியாவை போட்டுத் தாக்கும் கோவிட்-19!

இரு நிலநடுக்கங்களில் எந்தவித உயிர்சேதமோ அல்லது பொருட்சேதமோ ஏற்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இருப்பினும் அடுத்தடுத்த தகவல்களுக்காக ஒட்டுமொத்த நாடும் காத்துக் கொண்டிருக்கிறது.

கர்நாடகாவில் உள்ள ஹம்பியில் 7ஆம் நூற்றாண்டை சேர்ந்த கோவில் மற்றும் நினைவு சின்னங்கள் அமைந்துள்ளன. இதேபோல் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் புகழ்பெற்ற டாடா ஸ்டீல் விலங்குகள் சரணாலயம் உள்ளது. இங்கு புலிகள், சிறுத்தைப் புலிகள் உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் காணப்படுகின்றன.

நொய்டாவில் நேற்று 3.0 ரிக்டர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதாவது இரவு 10.42 மணிக்கு 4 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் பேரை தாண்டியாச்சு; கொரோனாவால் இப்படியொரு ஹேப்பி நியூஸ்!

இந்த நிலநடுக்கம் உத்தரப் பிரதேச மாநிலத்தின் மேற்கு கவுதம் புத்தா நகர் மாவட்டத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்பட்டுள்ளது. இது நொய்டாவில் இருந்து 19 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி