ஆப்நகரம்

இரவில் மீண்டும் அதிர்ந்த தலைநகரம்...பொதுமக்கள் பீதி

ஹரியானா மாநிலம், குர்கான் பகுதியில் இன்றிரவு ஏற்பட்ட நிலநடுக்கம், தலைநகர் டெல்லியின் பல பகுதிகளிலும் உணரப்பட்டது.

Samayam Tamil 3 Jul 2020, 8:16 pm
ஹரியானா மாநிலம், குர்கானுக்கு தென்மேற்கே 63 கிலோமீட்டர் தொலைவில் இன்றிரவு 7 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் உயிர்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல்கள் இல்லை.
Samayam Tamil earthquake


அதேசமயம், குர்கானுக்கு அருகே ஏற்பட்ட மிதமான நிலநடுக்கத்தின் தாக்கம், தலைநகர் டெல்லியின் பல பகுதிகளிலும் உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

ஏற்கெனவே கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கித் தவித்துவரும் டெல்லிவாசிகளை, சமீபகாலமாக அவ்வப்போது ஏற்பட்டுவரும் நிலநடுக்கங்களுக்கும் அவர்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

கடந்த 2 மாதங்களில் டெல்லியில் 11 முறை நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இப்படி டெல்லியில் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து தீவிர ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அடுத்த செய்தி