ஆப்நகரம்

தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நில அதிர்வு!

நில அதிர்வுகளால் அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகவில்லை

Samayam Tamil 20 Dec 2019, 5:54 pm
டெல்லி: தலைநகர் டெல்லி உள்பட வட மாநிலங்களில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


ஆஃப்கானிஸ்தானின் இந்து குஷ் பகுதியில் மையமாக கொண்டு 200 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நில நடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.8ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லி, ஸ்ரீநகர், சண்டிகர், மதுரா உட்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டது.

இதனால் அச்சமடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியேறி தெருக்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். நில அதிர்வுகளால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

பிலிப்பைன்சில் 6.8 ரிக்டர் நிலநடுக்கம்: அதிர்ஷ்டத்தால் தப்பிய அதிபர்

அதேபோல், ஆஃப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானின் பெஷாவர், இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அருணசல பிரதேசத்தில் 5.9 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

முன்னதாக, இந்திய-நேபாள எல்லையில் 4.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நில நடுக்கத்தின் அதிர்வுகள் டெல்லி, உத்தரப்பிரதேசம், உத்திரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த மாதம் உணரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி