ஆப்நகரம்

கொரோனா கொடுமை போதாதென்னு நள்ளிரவில் நாட்டு மக்களுக்கு மற்றொரு அதிர்ச்சி!!

அஸ்ஸாம் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முக்கிய நகரங்கள் பலவற்றில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

Samayam Tamil 6 Apr 2020, 2:11 am
அஸ்ஸாம் மாநிலத்தின் முக்கிய நகரமான குவஹாத்தியில் நேற்று (ஏப்ரல் 5) நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது நாட்டு மக்கள் மத்தியில் இன்னொரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil earthquake


கொரோனா வைரஸ் பீதி நாட்டு மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த வைரசின் தாக்குதலில் இருந்து தப்பிக்க கடந்த 12 நாட்களாக தொடர்ந்து தங்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர்.

வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கியிருக்க வேண்டிய சூழலில், ஊரடங்கு உத்தரவு மேற்கொண்டு நீட்டிக்கப்படுமா என்ற அச்சமும் அவர்களை பீடித்துள்ளது.

கொரோனா : சிகிச்சை மையமாக மாறும் விளையாட்டரங்கம்!!

கொரோனா வைரசால் நாட்டு மக்கள் அனுபவித்துவரும் கொடுமை போதாது என்று, நிலநடுக்கம் வேறு ஏற்பட்டு, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அஸ்ஸாம் மாநிலம், குவஹாத்தி நகரில் நேற்று நள்ளிரவு நிலநடுக்கம் உணரப்பட்டது. மாநிலத்தின் மற்ற பகுதிகளிலும் பரவலாக நிலநடுக்கம் உணரப்பட்டதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதனால் சேதங்கள் ஏதேனும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து உடனடி தகவல்கள் எதுவுமில்லை.

அடுத்த செய்தி