ஆப்நகரம்

அந்தமானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவு

அந்தமான் தீவில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது.

Samayam Tamil 11 Mar 2019, 8:15 am
அந்தமான் நிகோபார் தீவுப் பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்க ஏற்பட்டு வருவகிறது. இந்நிலையில் இன்று அதிகாலை 6.44 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil அந்தமான் தீவில் நிலநடுக்கம்


அதன்படி, அந்தமான் தீவில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.8-ஆக பதிவாகியுள்ளது. எனினும், இதனால் உயிர்சேதமோ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை.

முன்னதாக, பிப்.28ம் தேதி நிகோபரில் காலை 5.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. அதற்கும் முன்னதாக, பிப்.13ம் தேதி பேம்பூ பிளாட் உள்ளிட்ட சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது. இது ரிக்டர் அளவுகளில் 4.5 என பதிவானது.

எனினும், அந்தமான் தீவுப்பகுதிகளில் ஏற்பட்டு வரும் நிலநடுக்கத்தால் எந்தவிதமான பொருள்சேதமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி