ஆப்நகரம்

தவறைத் தவிர்க்க இயந்திரத்தில் புதிய மாற்றங்கள்: தேர்தல் ஆணையம்

வாக்கு இயந்திரத்தின் செயல்பாட்டில் ஏற்படும் தவறுகளைத் தடுக்க சிறு மாற்றங்களைச் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Samayam Tamil 13 Aug 2018, 12:57 am
வாக்கு இயந்திரத்தின் செயல்பாட்டில் ஏற்படும் தவறுகளைத் தடுக்க சிறு மாற்றங்களைச் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Samayam Tamil 65375427


தேர்தல்களின் போது பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரம் முறைகேடுகளுக்கு வழி வகுக்கிறது என்று பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அவற்றுக்கு மாற்றாக வாக்குச்சீட்டு மூலமே வாக்குப்பதிவை நடத்தவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இதனை தேர்தல் ஆணையம் கடுமையாக எதிர்ப்பதுடன் வாக்கு இயந்திரத்தின் செயல்பாட்டில் முறைகேட்டுக்கு இடமில்லை என்றும் தொடர்ந்து வாதிடுகிறது.

இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவறுகள் ஏற்படுவதைத் தவிர்க்க சில சிறிய மாற்றங்களைப் புகுத்தியுள்ளதாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேட்டி அளித்த அவர், "சிறிய மாற்றங்கள் மட்டுமே செய்யப்பட்டுள்ளன. சென்சார் வெப்பம் மற்றும் ஈரப்பதத்தினால் பாதிக்கப்படாமல் இருக்க அதன் மீது சிறிய மூடி போடப்பட்டிருக்கிறது. வாக்குப்பதிவு உறுதிச்சீட்டுக்கு (VVPAT) பயன்படுத்தப்படும் காகிதம் ஈரப்பதத்தால் பாதிக்கப்படாமல் இருக்க, ஈரப்பதத்தை உறிஞ்சாமல் தாக்குப்பிடிக்கும் பிரத்யேகமான காகிதங்கள் பயன்படுத்தப்பட உள்ளன" என்று அவர் கூறினார்.

வாக்களர் தனது வாக்கை பதிவுசெய்த பின், பதிவுசெய்த கட்சியின் சின்னம் சிறிய காகிதத்தில் அச்சிட்டப்பட்டு சிறிய துவாரம் வழியாக 7 விநாடிகளுக்குக் காட்டப்படும். இதன் மூலம் வாக்காளர் தனது வாக்கு சரியாக பதிவாகியுள்ளதா என்று உறுதிசெய்துகொள்ளலாம். இந்த வசதி அனைத்து வாக்குச்சாவடிக்களிலும் இருக்கும்.

ஈரப்பதம் அதிகமான பகுதிகளில் இதற்காக பயன்படுத்தப்படும் காகிதங்களைத் தவிரத்து பிரத்யேக காகிதங்கள் பயன்படுத்தப்படும்.

அடுத்த செய்தி