ஆப்நகரம்

குடியரசு துணை தலைவர் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு

குடியரசு துணை தலைவர் பதவிக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிவுள்ளது.

PTI 29 Jun 2017, 8:44 am
புதுடெல்லி: குடியரசு துணை தலைவர் பதவிக்கான தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கிவுள்ளது.
Samayam Tamil ec to announce vice president election date today
குடியரசு துணை தலைவர் தேர்தல் தேதி இன்று அறிவிப்பு


குடியரசு துணை தலைவராக இருக்கும் ஹமீது அன்சாரியின் பதிவிக்காலம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதியுடன் முடிவடைவதால், இந்த பதிவுக்கான தேர்தல் அறிவிக்கபபடவுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் குடியரசுத் ​துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இரண்டாவது முறையாக 2012ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மீண்டும் குடியரசுத் ​துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, குடியரசுத் ​துணை தலைவர் பதவிக்கான தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று (வியாழக்கிழமை) அறிவிக்கப்போவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டது.

பாராளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் வாக்குகள் அடிப்படையில் குடியரசுத் ​துணை தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார். இரு சபைகளிலும் உள்ள உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 790, என்றாலும் தற்போது சில இடங்கள் காலியாக உள்ளன.

இதனிடையே, கோவா மாநிலத்தில் இருந்து காங்கிரஸ் சார்பில் டெல்லி மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சாந்தாராம் நாயக்கின் பதவி காலம் ஜூலை 28ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஆகவே அந்த இடத்துக்கு புதிய உறுப்பினரை தேர்ந்தெடுக்க ஜூலை 21ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதாகவும், அன்று மாலையே வாக்குகள் எண்ணப்படும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

The date of polling for the post of Vice President will be announced today, the Election Commission said yesterday.

அடுத்த செய்தி