ஆப்நகரம்

காலியாகும் 6 தமிழக எம்.பி., பதவிகளுக்கு தேர்தல்!

தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அந்த இடங்களுக்கு தேர்தல் நடத்த உள்ளதாக, தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

TOI Contributor 18 May 2016, 9:52 pm
தமிழகத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர்கள் 6 பேரின் பதவிக்காலம் முடிவடைய உள்ளதால், அந்த இடங்களுக்கு தேர்தல் நடத்த உள்ளதாக, தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil election for 6 tamil nadu rajyasabha mp posts rajesh lakhoni
காலியாகும் 6 தமிழக எம்.பி., பதவிகளுக்கு தேர்தல்!


தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள அரசியல் கட்சிகளின் பிரதிநிதித்துவ அடிப்படையில், மாநிலங்களவையில் அந்தந்த கட்சிகளுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் உறுப்பினர் பதவி அளிக்கப்படும். இதன்படி, தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளுக்கும், மாநிலங்களவையில் 18 சீட்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய நிலையில், அதிமுக.,வைச் சேர்ந்த ரபி பெர்னார்ட், நவநீதகிருஷ்ணன், பால் மனோஜ் பாண்டியன், திமுக.,வைச் சேர்ந்த தங்கவேலு, கே.பி.ராமலிங்கம் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது.

இதையடுத்து, அந்த 6 எம்.பி., பதவிகளுக்கும் ஜூன் 11ம் தேதி தேர்தல் நடத்த உள்ளதாக, தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவித்துள்ளார்.

வரும் 24ம் தேதி தொடங்கி, மே 31ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்றும், ஜூன் 1ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும் என்றும் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். ஜூன் 11ம் தேதி வாக்குப் பதிவு நடத்தப்பட்டு, அன்றைய இரவே வாக்கு எண்ணிக்கை நடத்தி, முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் ராஜேஷ் லக்கானி குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி