ஆப்நகரம்

கிராமத்தில் புகுந்து நூற்றுக்கணக்கான யானைகள் அட்டகாசம்

அசாமில் நூற்றுக்கணக்கான யானைகள் கிராமத்தில் புகுந்து ஏராளமான வீடுகளை துவம்சம் செய்துள்ளது.

TNN 10 Dec 2017, 9:11 am
அசாமில் நூற்றுக்கணக்கான யானைகள் கிராமத்தில் புகுந்து ஏராளமான வீடுகளை துவம்சம் செய்துள்ளது.
Samayam Tamil elephants attack in assam village
கிராமத்தில் புகுந்து நூற்றுக்கணக்கான யானைகள் அட்டகாசம்


அசாம் மாநிலம் காதியாடோலி என்ற காட்டுப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் அடிக்கடி அருகிலிலுள்ள கிராமங்களுக்கு உணவு தேடி வரும்.

இந்நிலையில், காதியாடோலி வனப்பகுதியில் உள்ள நகோன் கிராமத்துக்குள், நூற்றுக்கணக்கான யானைகள் உணவு தேடி வந்தது. அப்போது, வயல் வெளியில், பயிரிடப்பட்ட பயிர்களை நாசம் செய்த யானைகள், கிராமத்திலுள்ள வீடுகளையும் தாக்கியது.

இது குறித்து வனத்துறையினருக்கு புகார் அளித்தும், அவர்கள் காலதாமதமாக வந்ததால், ஆத்திரமடைந்த கிராம மக்கள், வனத்துறையினரை தாக்கினர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வனத்துறையினரை தாக்கிய கிராம மக்கள் நான்கு பேரை கைது செய்தனர்.

அடுத்த செய்தி