ஆப்நகரம்

இஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்க ஊடகத்திற்கு பதிலடி கொடுத்த கார்ட்டூன்

இஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்க ஊடகத்திற்கு கார்ட்டூன் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 20 Feb 2017, 5:41 am
இஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்க ஊடகத்திற்கு கார்ட்டூன் மூலம் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil elite space club toi cartoon
இஸ்ரோவை கிண்டலடித்த அமெரிக்க ஊடகத்திற்கு பதிலடி கொடுத்த கார்ட்டூன்


இந்தியா விண்வெளி ஆராய்சி நிறுவனமான இஸ்ரோ சில தினங்களுக்கு முன்பு 104 செயற்கை கோள்களை ஒரே ராக்கெட்டில் வைத்து விண்ணுக்கு அனுப்பி உலக சாதனை படைத்தது. இஸ்ரோவின் இந்த சாதனை உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

ஆனால் இஸ்ரோ இந்த சாதனையை நிக்ழ்த்துவதற்கு முன்னர் சில அவமானங்களையும் சந்தித்துள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இஸ்ரோ செவ்வாய் கிரகத்திற்கு செயற்கை கோளை அனுப்பியது. அப்போது அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான நியூயார்க் டைம்ஸ் இஸ்ரோவின் முயற்சியை கிண்டலடித்து மாடு மேய்ப்பவர்கள் எல்லாம் விண்கலம் விடுகிறார்கள் என்று கார்டூன் வெளியிட்டிருந்தது.

இந்த கார்ட்டூனுக்கு இந்தியாவின் தரப்பில் இருந்து கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டதால் அந்த ஊடகம் மன்னிப்பு கோரியது. இந்த்நிலையில் இஸ்ரோ சில தினங்களுக்கு முன்னர் நிகத்திய சாதனையில் 104 செயற்கை கோளில் 8 செயற்கை கோள்கள் அமெரிக்கவினுடையது.

நியூயார்க் டைம்ஸில் 2014-ல் வெளியான கார்ட்டூனுக்கு டைம் ஆப் இந்தியா பத்திரிக்கையில் வெளியான கார்ட்டூன் தற்பொழுது தக்க பதிலடியை கொடுத்திருக்கிறது. டைம் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள கார்ட்டூனில் , " நீயூயார்க் டைம் வெளியிட்ட கார்ட்டூனை குறிப்பிட்டு, "மாடு மேய்ப்பவர்களான இந்தியரிடம் தான் அமெரிக்கர்கள் தங்களது செயற்க்கை கோளை விண்ணில் செலுத்துமாறு வேண்டி கொண்டனர் "என்ற அர்த்தம் வருமாறு வெளியிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி