ஆப்நகரம்

வங்கிக் கணக்கில் சம்பளம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்

ஊழியர்களுக்கான சம்பளத்தை ரொக்கமாக வழங்காமல் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.

TNN 30 Dec 2016, 1:53 am
புதுதில்லி: ஊழியர்களுக்கான சம்பளத்தை ரொக்கமாக வழங்காமல் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
Samayam Tamil employees can get salary from bank account president approves emergency act
வங்கிக் கணக்கில் சம்பளம்: குடியரசுத் தலைவர் ஒப்புதல்


ரூ.500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமரின் அறிவிப்பைத் தொடர்ந்து, மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்க மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

அதன்படி, மாத ஊதியம் பெறும் தொழிலாளர்கள் அனைவருக்கும் மின்னணு முறையில் சம்பளத்தை வழங்க, அதாவது, சம்பளத்தை ரொக்கமாக வழங்காமல், வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் அல்லது காசோலை மூலமாக வழங்க வழி வகை செய்யும் அவசர சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதற்கு, மத்திய அமைச்சரவையும் அண்மையில் ஒப்புதல் அளித்திருந்தது.

இந்நிலையில், ஊழியர்களுக்கான சம்பளத்தை ரொக்கமாக வழங்காமல் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் அவசர சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்.
Employees can get salary from bank account: President approves emergency act

அடுத்த செய்தி