ஆப்நகரம்

Aircel Maxis Case: ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப சிதம்பரம் பெயரை குற்றப்பத்திரிக்கையில் இணைத்த அமலாக்கத்துறை

ப சிதம்பரம் பெயரை குற்றப்பத்திரிக்கையில் இணைத்த அமலாக்கத்துறை - ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் அதிரடி.

Samayam Tamil 25 Oct 2018, 5:07 pm
புதுடெல்லி : ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் நிதியமைச்சராக இருந்த ப சிதம்பரம் அந்நிய முதலீடு ஊக்குவிப்பு முலம் லஞ்சம் பெற்றதாக புகார் உள்ள நிலையில், இந்த வழக்கின் குற்றப்பத்திரிக்கையில் ப சிதம்பரத்தின் பெயரை அமலாக்கத்துறை இணைத்துள்ளது.
Samayam Tamil p chidambaram.


ப.சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக பொறுப்பு வகித்த காலத்தில் ஏா்செல் நிறுவனத்தில், மலேசியாவைச் சோ்ந்த மேக்சிஸ் நிறுவனம் முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் மூலம் காா்த்தி சிதம்பரம் அனுமதி பெற்றுத் தந்ததாகவும், அதற்கு பிரதிபலனாக அவருக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு ரூ.1.16 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் புகாா் எழுந்தது.

இதற்கான தொலைக்காட்சி செய்தி ஆதாரத்தை வைத்து தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில் மொத்தம் 9 பேர் அடங்கிய அந்த பட்டியலில் ப.சிதம்பரத்தின் பெயரையும் அமலாக்கத்துறை இணைத்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் பெயரும் சேர்க்கப்பட்டது.

கடந்த 2006ல் மேக்சிஸ் நிறுவனம் ஏர்சல் நிறுவனத்தில் அந்நிய முதலீடு செய்தது. இந்த திட்டத்தில் ரூ. 600 கோடி வரை முதலீடு வரைவு செய்யப்பட்டது.
இந்த முதலீட்டில் சில தினங்களில் ஏர்செல் டெலிவெண்டர்ஸ் லிமிடெட் நிறுவனம் கார்த்தியின் நிறுவனத்துடன் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி