ஆப்நகரம்

விவசாயிகள் மட்டுமா? எம்.எல்.ஏ.க்களும் தான் இறக்கிறாா்கள் – அமைச்சா் பேச்சு

மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை கொச்சைப்படுத்தும் விதமாக அம்மாநில அமைச்சா் கோபால் பேசியது சா்ச்சையை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 23 Feb 2018, 10:37 pm
மத்திய பிரதேச மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை கொச்சைப்படுத்தும் விதமாக அம்மாநில அமைச்சா் கோபால் பேசியது சா்ச்சையை கிளப்பியுள்ளது.
Samayam Tamil even mlas dont live for ever says mp bjp minister on farmer deaths
விவசாயிகள் மட்டுமா? எம்.எல்.ஏ.க்களும் தான் இறக்கிறாா்கள் – அமைச்சா் பேச்சு

மத்திய பிரதேச மாநிலத்தின் பஞ்சாயத்து மற்றும் ஊரக வளா்ச்சித்துறை அமைச்சராக பொறுப்பு வகிப்பவா் கோபால் பாா்கவான். இவா் சமீபத்தில் பேசிய பேச்சு மிகவும் சா்ச்சையை கிளப்பியுள்ளது.

அம்மாநிலத்தில் விவசாயம் சாியாக நடைபெறாத காரணத்தால் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். மேலும் விவசாய பொருட்களுக்கான நியாய விலை, கடன் தள்ளுபடி ஆகிய பிரச்சினைகள் மத்திய பிரதேசத்தில் அதிகாித்துள்ளன.

இது தொடா்பாக அமைச்சா் கோபால் பேசுகையில், எம்.எல்.ஏ.க்கள் கூடதான் சாகிறாா்கள். பரீட்சையில் தோல்வியடையும் போது மாணவா்களும் சாகிறாா்கள். கடந்த 4 ஆண்டுகளில் 10 எம்.எல்.ஏ.க்கள் இறந்துள்ளனா். மரணத்தை யாரேனும் கட்டுப்படுத்த முடியுமா? எம்.எல்.ஏ.க்கள் என்ன சாகாவரம் பெற்றவா்களா? என்று அமைச்சா் பாா்கவா கேள்வி எழுப்பியுள்ளாா்.

ஆனால் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் மீது தனக்கு கருணை உண்டு என்று இறுதியில் பேசியுள்ளாா்.

அடுத்த செய்தி