ஆப்நகரம்

இந்தியத் தேர்தல் ஆணையராக எக்ஸ் நிதிச் செயலாளர் நியமனம்!

இந்தியத் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா ராஜினாமா கடிதம் அளித்ததை தொடர்ந்து, முன்னாள் நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் அந்த பொறுப்பில் பணியமர்த்தப்படுவார் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்...

Samayam Tamil 22 Aug 2020, 12:34 am
தேர்தல் ஆணையராக உள்ள அசோக் லவாசா வரும் 31ஆம் தேதியுடம் பதவி விலகுவதாகக் கடிதம் அளித்துள்ளார். இதையடுத்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜிவ் குமாரை அந்த பொறுப்பில் அமர்த்த முடிவு செய்துள்ளது.
Samayam Tamil இந்தியத் தேர்தல் ஆணையராக எக்ஸ் நிதிச் செயலாளர் நியமனம்!
இந்தியத் தேர்தல் ஆணையராக எக்ஸ் நிதிச் செயலாளர் நியமனம்!


இந்தியத் தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு அடுத்த இடத்தில் இருப்பவர், இந்தியத் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா. இவர் சமீபத்தில் ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதையடுத்து தேர்தல் ஆணையர் பொறுப்பை ராஜினாமா செய்ய முடிவெடுத்த அசோக் லவாசா, தனது ராஜினாமா கடிதத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு அனுப்பி வைத்தார். அசோக் லவாசாவின் கோரிக்கையை ஏற்ற ராம்நாத் கோவிந்த், அதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.

நீட் தேர்வு திட்டமிட்டபடிதான் நடக்கும்- கல்வி அமைச்சகம்!

அதன்படி ஆகஸ்ட் 31ஆம் தேதியிலிருந்து தேர்தல் ஆணையர் பொறுப்பிலிருந்து அசோக் லவாசா விலகுகிறார். இவரின் பதவிக்காலம் முடிவடைய 2 ஆண்டுகள் உள்ளது. இதையடுத்து வேறு ஒருவரை இந்த பொறுப்பில் அமர்த்த முடிவு செய்த மத்திய அரசு, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் குமாரைத் தேர்வு செய்துள்ளது.

ராஜீவ் குமார் நிதிச் செயலாளராகப் பணி ஆற்றியவர். இவர் தேர்தல் ஆணையராகச் செப்டம்பர் மாதம் முதல் தேதி முதல் பணியைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ராஜீவ் குமார் பொது கொள்கை சார்ந்து நல்ல அனுபவம் பெற்றவர் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த செய்தி