ஆப்நகரம்

ரூ.500 கோடி செலவில் முன்னாள் அமைச்சரின் மகள் திருமணம்!?

ரூ.500 கோடி செலவில் முன்னாள் அமைச்சரின் மகள் திருமணம்!?

TOI Contributor 13 Nov 2016, 2:47 pm
கர்நாடக முன்னாள் அமைச்சரும், சுரங்கத்தொழிலதிபருமான ஜனார்த்தன ரெட்டி தனது மகளின் திருமணத்தை 500 கோடி செலவில் பிரம்மாண்டமாக நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil ex minister janarthan reddy daughter marriage for 500 crore budget
ரூ.500 கோடி செலவில் முன்னாள் அமைச்சரின் மகள் திருமணம்!?


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தனது மகளின் திருமணத்திற்காக ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவரது மகள் பிரம்ஹினிக்கும், ஆந்திர தொழிலதிபர் மகன் ராஜீவ் ரெட்டிக்கும் நவம்பர் 16ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. மகளின் திருமணத்திற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகளை செய்துள்ள ரெட்டி, திருமண அழைப்பிதழிற்கே 2.25 கோடி ரூபாய் செலவு செய்தார். நவீன தொழில்நுட்பத்தில் வீடியோ முறையில் திருமணத்திற்கு அழைப்பது போன்று வடிவமைக்கப்பட்டு இருந்தது.

திருமணத்திற்கு சில நாட்களே உள்ள நிலையில் பெங்களூர் அரண்மனை மைதானத்தில் விஜயநகர பேரரசு போன்று செட் போடப்பட்டுள்ளது. திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. திடீரென 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளதால் திருமணங்களுக்கான செலவை ஆன்லைனில் செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பணப்பரிமாற்றத்தை வருமான வரித்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாக ஜனார்த்தன ரெட்டியின் வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வளவு செலவுகள் செய்வது எப்படி சாத்தியம் என்று கேள்வி எழுந்துள்ளது. மேலும் திருமண செலவுகள் 500 கோடியை தொடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்த செய்தி