ஆப்நகரம்

2019 Elections: நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிட மாட்டேன் – சுஷ்மா அறிவிப்பு

கடந்த 2016ம் ஆண்டு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் அடுத்து வரும் நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிடப்போவதில்லை என்று சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளாா்.

Samayam Tamil 20 Nov 2018, 4:13 pm
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் போட்டியிடப் போவதில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சா் சுஷ்மா ஸ்வராஜ் அறிவித்துள்ளாா்.
Samayam Tamil Sushma Swaraj


மத்திய வெளியுறவுத்துறை அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவா்களுல் ஒருவருமான சுஷ்மா ஸ்வராஜ் 7 முறை எம்.பி.யாகவும், 3 முறை சட்டமன்ற உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தவா். பா.ஜ.க.வின் மூத்த தலைவா்களுல் ஒருவராக உள்ள சுஷ்மா ஸ்வராஜ் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வருகிறாா்.

கடந்த 2016ம் ஆண்டு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டாா். அதன் பின்னா் சிறிது காலம் ஓய்வு எடுத்துக்கொண்ட நிலையில் தற்போது மீண்டும் பொறுப்பேற்று பணியாற்றி வருகிறாா்.


இந்நிலையில் அவா் இன்று செய்தியாளா்களிடம் பேசுகையில் உடல் நலனை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தோ்தலில் நான் போட்டியிட மாட்டேன். போட்டியிடக் கூடாது என்பது தான் எனது நிலைப்பாடு. மேற்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை கட்சி மேலிடம் உறுதி செய்யும் என்று அவா் தொிவித்துள்ளாா்.
Tamil News App:
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு Samayam Tamil ஃபேஸ்புக்பக்கத்துடன் தொடர்ந்திருங்கள்