ஆப்நகரம்

வேதனை அடைகிறேன்: ட்விட்டரில் பிரதமர் மோடி பதிவு!!

ரயில் விபத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 17 பேர் உயிரிழந்ததை அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். அனைத்து உதவிகளும் அவர்களது குடும்பத்துக்கு செய்யப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 8 May 2020, 12:06 pm
அவுரங்காபாத் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீது ரயில் ஏறியதில் 17 பேர் இன்று அதிகாலை உயிரிழந்தனர்.
Samayam Tamil அவுரங்காபாத் ரயில் விபத்து


இதுகுறித்து தனது ட்விட்டரில் வருத்தம் தெரிவித்து இருக்கும் பிரதமர் மோடி, ''மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் ரயில் தண்டவாளத்தில் உறங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இதுகுறித்து ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயலுடன் பேசி இருக்கிறேன்'' என்று தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேச தொழிலாளர்கள் மராட்டிய மாநிலத்தில் தங்கி வேலை செய்து வந்தனர். பொது முடக்கம் காரணமாக சாலை மார்க்கமாக நடந்து சென்றால் காவல்துறை கைது செய்து விடும் என்ற எண்ணத்தில் ஜல்னா பகுதியில் இருந்து சொந்த ஊரான புஷாவல் நோக்கி ரயில் தண்டவாளத்தில் நடந்தே சென்றனர். தொடர்ந்து நடந்து சென்ற களைப்பில் குழந்தைகளுடன், ரயில் தண்டவாளத்தில் அசந்து உறங்கினர்.

Maharashtra Train Accident: தண்டவாளத்தில் உறக்கம்; புலம்பெயர் தொழிலாளர்களின் உயிரைப் பறித்த ரயில்!
பொது முடக்கம் இருப்பதால், ரயில்கள் வராது என்று நினைத்த தொழிலாளர்கள் ரயில் தண்டவாளத்தில் படுத்து தூங்கினர். அதிகாலை நேரத்தில் ரயில் அருகில் வருவதை உணர்ந்து எழுவதற்குள் அவர்கள் மீது ஏறிச் சென்றது. இதில் 17 பேர் உயிரிழந்தனர்.

இது உண்மையில் வாயுக்கசிவே இல்லை - விபத்து நிகழ்ந்த விசாகப்பட்டின நிறுவனத்தின் பொறியாளர் விளக்கம்!

இதுபற்றி தகவலறிந்த ரயில்வே காவல்துறை மற்றும் உள்ளூர் காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்துக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி