ஆப்நகரம்

Fact Check: ட்ரம்ப் வருகைக்காக கொல்லப்படும் ஆயிரக்கணக்கான நாய்கள்... செய்தி உண்மையா?

இதனை பதிவிட்ட ஒரே நாளில் 8200+ பயனர்கள் முகநூலில் பகிர்ந்துள்ளனர்.

Samayam Tamil 21 Feb 2020, 11:38 am
எதிர்வரும் 24ஆம் தேதி அகமதாபாத் வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையைப் போலவே இதுவும் ஊடகங்களால் பரவலாகப் பேசப்படுகிறது. ஆனால், ஷி ஜின்பிங்குக்கு செய்யப்பட்ட ஏற்பாடுகளை விடப் பலமடங்கு உழைப்பையும் பணத்தையும் கொட்டி ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன டொனால்ட் ட்ரம்ப் வருகைக்கு
Samayam Tamil fact check story on dogs slaughtered for trump visit to india
Fact Check: ட்ரம்ப் வருகைக்காக கொல்லப்படும் ஆயிரக்கணக்கான நாய்கள்... செய்தி உண்மையா?



இதுகுறித்த செய்திகள் நாளுக்கு நாள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதைக் காரணமாகக் கொண்டே அதற்கிடையில் சில பொய்ச் செய்திகளும் பரவி வருகின்றன. அந்தவகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகைக்காக அகமதாபாத்தில் கூட்டம் கூட்டமாகத் தெருநாய்கள் கொல்லப்படுகின்றன என்று ஒரு செய்தி பரவி வந்தது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த செய்தி என்பதால் இதன் உண்மைத்தன்மை குறித்து அறிய வேண்டியது அவசியமாகிறது.

என்ன செய்தி:
அமெரிக்க அதிபர் வருகையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான தெரு நாய்களைக் கொன்று குவிக்கும் குஜராத் அரசு😢😢😢

இதற்கு எந்த பீட்டாவும்(PETA) குரல் கொடுக்காதது ஏன்?
சீனப் பிரதமர் மகாபலிபுரம் -சென்னை வந்தப்ப தெரியாத்தனமா ஒரு நாய் உள்ள புகுந்ததற்காடா இத்தனை களேபரங்கள்???

என்று எழுதப்பட்டு, இத்துடன் இறந்த தெருநாய்கள் ஒரு லாரியில் ஏற்றப்பட்டிருக்கும் படத்தையும் முகநூலில் வெளியிட்டிருந்தார் ஒருவர்.


உண்மை என்ன:

இது 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் எடுக்கப்பட்ட ஒரு காணொலியின் ஸ்க்ரீன்ஷாட். தெலங்கானா மாநிலம் சித்திப்பேட் பகுதியில் நகராட்சி உத்தரவுடன் தெருநாய்கள் கொல்லப்பட்டுள்ளன. ஏறக்குறைய 40க்கும் மேற்பட்ட நாய்கள் கொல்லப்பட்ட நிலையில் இதுகுறித்து நியூஸ் 18 அன்றே ஒரு செய்தி வெளியிட்டுள்ளது.

Fake Alert: மோடி - ட்ரம்ப் சுவரோவியத்தின் மீது சிறுநீர் கழிப்பு? - உண்மைப் பின்னணி என்ன?


அதே பகுதியைச் சேர்ந்த வித்யா என்பவர் இதுகுறீத்து நியூஸ் மினிட் தளத்திற்கு பேட்டியும் அளித்துள்ளார்.

மேலும் தி பிரிண்ட் நிறுவனம் இந்த செய்தியின் காணொலியைத் தன் யூ ட்யூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.


இந்தக் காணொலியின் 0.25ஆவது நொடியில் வரும் காட்சிதான் ஸ்க்ரீன்ஷாட் எடுக்கப்பட்டு பரப்பப்பட்டு வருகிறது என்று தமிழில் இருக்கும் உண்மையறியும் குழுமங்களில் ஒன்றான யூடர்ன் தனது தளத்திலும் செய்தி வெளியிட்டுள்ளது.



மதிப்பீடு:
ட்ரம்ப் வருகைக்காக ஆயிரக்கணக்கில் நாய்கள் கொல்லப்பட்டன என்று பரவும் செய்தி பொய். அது தெலங்கானாவில் சித்திப்பேட் நகராட்சியின் நடவடிக்கைகளில் ஒன்று.

கூடுதல் தகவல்:
“ஆனால், ட்ரம்ப் வரும் வழியில் இருக்கும் தெருநாய்கள் மற்றும் நிலகை இன மாடுகள் நகராட்சி நிர்வாகத்தால் பிடிக்கப்பட்டு வேறு இடங்களில் விடப்படுகின்றன என்ற செய்தி டைம்ஸ் ஆஃப் இந்தியாவால் வெளியிடப்பட்டது.

Ahmedabad: Dogs, nilgais to disappear from Donald Trump route

அடுத்த செய்தி