ஆப்நகரம்

டாய்லெட்டில் 3 மணி ஒளிந்திருந்த குடும்பம்; பெங்களூரு கலவரத்தில் இப்படியொரு சோகம்!

பெங்களூருவில் நடந்த கலவரத்தின் போது கலவரக்காரர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக குடும்பம் ஒன்று டாய்லெட்டில் ஒளிந்திருந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

Samayam Tamil 13 Aug 2020, 11:58 am
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த செவ்வாய் அன்று இரவு காவல் பைரசந்திரா பகுதியில் கலவரம் வெடித்தது. புலிகேசி நகர் எம்.எல்.ஏ சீனிவாசமூர்த்தியின் உறவினர் நவீன் போட்ட பேஸ்புக் போஸ்ட் தான் இதற்கு காரணம். இஸ்லாமியர்கள் குறித்த சர்ச்சை பதிவால் அன்றைய இரவு தூங்கா இரவாக மாறிப் போனது. கிழக்கு பெங்களூவின் பல்வேறு பகுதிகள் சூறையாடப்பட்டன. வாகனங்கள் தீக்கு இரையாக்கப்பட்டன. நாகம்மா லே அவுட் பகுதியின் 7வது கிராஸ் தெருவில் உள்ள வீட்டின் முதல் மாடியில் ராபின், ஷர்மிளா ஆகியோர் வசித்து வந்தனர். இந்த வீடு நவீனின் சகோதரர் ஹர்ஷாவிற்கு சொந்தமானது.
Samayam Tamil Bengaluru Violence


இவர்கள் வீட்டிற்கு அருகே தான் சர்ச்சைக்குரிய போஸ்ட் போட்ட நவீனும் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 7.30 மணியளவில் நவீனின் வீட்டை தாக்க 100க்கும் மேற்பட்டோர் திரண்டு வருவதை ராபின் குடும்பத்தினர் பார்த்துள்ளனர். அந்த சமயம் எம்.எல்.ஏவின் உறவினர்கள் அவர்கள் வீட்டின் மாடியில் இருந்தனர்.

எம்.எல்.ஏவை கொல்ல சதி; பெங்களூரு நகரை சூறையாட திட்டம் - பகீர் கிளப்பும் அமைச்சர்!

அவர்களைக் கண்ட கும்பல் வேகவேகமாக மேலே ஏறி வந்தது. இதையடுத்து ராபின், மனைவி, இரண்டு குழந்தைகள், தாய் ஆகியோர் அவர்கள் வீட்டின் சிறிய டாய்லெட்டில் ஒளிந்து கொண்டனர். சுமார் 3 மணி நேரம் டாய்லெட்டிலேயே ஒளிந்திருந்து தப்பித்துள்ளனர். இதற்கிடையில் ஷர்மிளாவின் ஸ்கூட்டருக்கு கலவரக்காரர்கள் தீவைத்துள்ளனர்.

ஹர்ஷாவின் காரும் தீக்கு இரையாகத் தொடங்கியது. நடந்த சம்பவம் பற்றி அருகில் வசித்து வரும் ஷர்மிளாவின் அத்தை மலர்மதி கூறுகையில், கலவரக்காரர்களிடம் கெஞ்சினேன். ஸ்கூட்டருக்கு தீ வைக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன். ஆனால் எனக்கே தீவைத்து விடுவதாக கும்பல் மிரட்டியதால் ஓடிவந்து விட்டதாக தெரிவித்தார்.

கலவரத்திலிருந்து இந்து கோயிலைக் காப்பாற்றிய முஸ்லிம் இளைஞர்கள்!

இதுபற்றி ஷர்மிளா கூறுகையில், எங்கள் வீட்டின் பிரிட்ஜ், வீட்டின் அத்தியாவசியப் பொருட்கள் உள்ளிட்டவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். கும்பலிடம் இருந்து தப்பிக்க டாய்லெட்டில் ஒளிந்து கொண்டோம். நீண்ட நேரம் ஒளிந்திருந்ததால் எனது மகன் வாந்தி எடுத்து மயக்கமடைந்து விட்டதாக வேதனையுடன் தெரிவித்தார். அப்பகுதிகளில் உள்ள பல்வேறு வீடுகளில் ஏராளமான பொருட்களை கும்பல் சூறையாடிச் சென்றதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி