ஆப்நகரம்

இயற்கையில் கரைந்த சூழலியல் போராளி சுகதகுமாரி; மீளாத் துயர்!

பிரபல மலையாள கவிஞராக திகழ்ந்த சுகதகுமாரி கொரோனா பாதிப்பின் தொடர்ச்சியாக ஏற்பட்ட உடல்நலக் குறைபாடுகளால் உயிரிழந்தார்.

Samayam Tamil 24 Dec 2020, 12:32 pm
பத்மஸ்ரீ விருது பெற்ற மலையாள கவிஞர் சுகதகுமாரிக்கு சமீபத்தில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தீவிர நிமோனியா பாதிப்பு ஏற்பட்டது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசக் கருவிகள் மூலம் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நுரையீரல் தொற்று, தீவிர நிமோனியா ஆகியவற்றால் உடல்நிலை மோசமானது. இந்த சூழலில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். அவருக்கு வயது 86. திருவனந்தபுரத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள நந்தவனத்தில் இயற்கை எழில் சூழ்ந்த இல்லத்தில் சுகதகுமாரி வாழ்ந்து வந்தார்.
Samayam Tamil Sugathakumari


பாலக்காடு மாவட்டத்தில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு பகுதியில் 1970ஆம் ஆண்டு கேரள அரசின் மின்சார வாரியம், அனல்மின் நிலையத்தைக் கட்ட நினைத்தது. அவ்வாறு செய்தால் சுமார் 8.3 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள காடு நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படும். இதற்கு எதிராக கவிஞர்கள், ஓவியர்கள், விஞ்ஞானிகள், பேராசிரியர்கள், பல்துறை நிபுணர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து போராடினர்.

கடைகள் இயங்காது; வாகனங்கள் ஓடாது - அமலுக்கு வந்தது ஊரடங்கு!

அவர்களில் முதன்மையானவர் சுகதகுமாரி. இந்த போராட்டத்திற்காக எழுத்தாளர்கள், கலைஞர்கள் அடங்கிய ‘பிரக்ரிதி சம்ரக்‌ஷன ஸமிதி’ என்ற குழு அமைக்கப்பட்டது. இதன் செயலாளராக சுகதகுமாரி இருந்தார். அமைதிப் பள்ளத்தாக்கு போராட்டம் தொடர்பாக ‘மரத்தின்னு ஸ்துதி’ என்ற பெயரில் சுகதகுமாரி எழுதிய கவிதை மிகவும் பிரபலம். கவிதை உலகில் மிகவும் பிரபலமாக இருந்த அவர், களப் போராட்டத்தில் இறங்கிய முதல் நிகழ்வு இதுவாகும்.

இந்த போராட்டத்திற்காக கவியரங்கம், நீதிமன்றத்தில் வழக்கு, இந்திரா காந்திக்கு கடிதம் என பல்வேறு விஷயங்களை முன்னெடுத்தனர். இதையடுத்து 1984ஆம் ஆண்டு அந்த திட்டம் கைவிடப்பட்டது. இந்தியாவில் வனப் பாதுகாப்புச் சட்டம் உருவாக காரணமாக அமைந்தது அமைதிப் பள்ளத்தாக்கு போராட்டம் என்று கூறினால் அது மிகையல்ல. தனது வாழ்நாளில் சுமார் 45 ஆண்டுகள் இயற்கையை பாதுகாப்பதற்காக போராடியுள்ளார்.

உங்களை மாதிரி தான் நானும் நினைத்தேன், ஆனால் முடியல: ஜெயம் 'பூமி' ரவி
1968ஆம் ஆண்டு கேரள சாகித்ய விருதைப் பெற்றார். 1978ல் கேந்திர சாகித்ய அகாடமி விருது, 1982ல் ஒடுக்குழல் விருது, 1984ல் வயலார் விருது உள்ளிட்ட பல்வேறு சிறப்புமிக்க விருதுகளை வென்றுள்ளார். கவிதை உலகு இவர் புகழ் பாடுவதை, இயற்கை அன்னை தான் சுகதகுமாரியை என்றென்றும் நினைவில் ஏந்தும் என்று கூறலாம்.

அடுத்த செய்தி