ஆப்நகரம்

மகளின் சடலத்தை பல கி.மீ., தூரம் தூக்கி சென்ற தந்தை

பீகாரில் இறந்த சிறுமிக்கு ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் அந்த சிறுமியின் உடலை, தந்தையே சுமந்து சென்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.

TNN 19 Oct 2017, 5:40 pm
பீகாரில் இறந்த சிறுமிக்கு ஆம்புலன்ஸ் தர மறுத்ததால் அந்த சிறுமியின் உடலை, தந்தையே சுமந்து சென்ற அவலநிலை ஏற்பட்டுள்ளது.
Samayam Tamil father carried daughters dead body in bihar
மகளின் சடலத்தை பல கி.மீ., தூரம் தூக்கி சென்ற தந்தை


பீகார் மாநிலம் கஜ்ரா கிராமத்தில் வசிக்கும் கூலி தொழிலாளியான ராம்பலாக் என்பவரின் 9 வயது மகளுக்கு கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அவரின் தந்தை சிறுமியை பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார்.

ஆனால் மருத்துவர்கள் சிறுமிக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால், சிறுமி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அந்த சிறுமியின் சடலத்தை ஏற்றி செல்ல மருத்துவமனை தரப்பில் ஆம்புலன்ஸ் மறுக்கப்பட்டதால் மக்களின் உடலை அவரே சுமந்து சென்றுள்ளார்.

வடமாநிலங்களில் இறந்தவர்களின் உடலை அவரது உறவினர்களே சுமந்து செல்லும் அவல நிலை தொடர்ச்சியாக நிகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.



father carried daughters dead body in bihar

அடுத்த செய்தி