ஆப்நகரம்

அந்திராவுக்கு ஒரே தலைநகர்: பெண் பக்தர்கள் நூதன வழிபாடு

ஆந்திராவுக்கு ஒரே தலைநகராக அமராவதியை அறிவிக்க வலியுறுத்தி தலைநகரம் அமைப்பதற்காக நிலம் கொடுத்த குடும்பங்களை சேர்ந்த பெண்கள் நடைபயணமாக புறப்பட்டு வழிபாடு நடத்தினர்

Samayam Tamil 19 Jan 2020, 5:34 pm
அமராவதி: ஆந்திராவுக்கு ஒரே தலைநகரை வலியுறுத்தி விஜயவாடா கனகதுர்க்கமாவை இரு முடியுடன் சென்று பெண் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
Samayam Tamil வழிபாட்டில் ஈடுபட்ட பெண்கள்
வழிபாட்டில் ஈடுபட்ட பெண்கள்


ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் பிரிவினைக்கு பின்னர் தெலங்கானா, ஆந்திரா என இரண்டானது. அதையடுத்து, ஆந்திர மாநிலத்துக்கு அமராவதியை தலைநகராக அறிவித்து அதற்கான பணிகளை அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வந்தார். இதற்காக நிலங்களும் கையகப்படுத்தப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, அம்மாநிலத்தில் நடைபெற்ற கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள ஜெகன் மோகன், ஆந்திராவின் தற்போதைய தலைநகரான அமராவதியை சட்டப்பேரவை தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராகவும் , கர்னூலை உயர்நீதிமன்ற தலைநகராகவும் ஏற்படுத்தி மாநிலத்திலுள்ள 13 மாவட்டங்களும் சம வளர்ச்சி அடைய செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்துவருகிறோம் என அறிவித்தார்.

இந்தியாவுக்கே இந்த கதியா? ஒரே ஆண்டில் 1.34 லட்சம் பேர் தற்கொலை

ஆனால் அமராவதியில் தலைநகர் ஏற்படுத்த நிலம் கொடுத்த அப்பகுதி பொதுமக்கள், விவசாயிகள் ஆகியோர் அரசின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து கடந்த 34 நாட்களாக தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தப்பு பண்ணிட்டீங்களே கேரள மக்களே; இப்படியொரு அதிர்ச்சி தந்த ராமச்சந்திர குகா!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொது மக்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகளான தெலுங்குதேசம், பாரதிய ஜனதா, ஜனசேனா, கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆகிய கட்சிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஆந்திராவுக்கு ஒரு தலைநகரா அல்லது மூன்று தலைநகரங்கள் என்பது பற்றிய பிரச்சினை மாநிலத்தில் இப்போது அனைவராலும் பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது.


இந்த நிலையில் ஒரே தலைநகராக அமராவதியை அறிவிக்க வலியுறுத்தி அமராவதியில் தலைநகரம் அமைப்பதற்காக நிலம் கொடுத்த குடும்பங்களை சேர்ந்த பெண்கள் தங்கள் ஊர்களிலிருந்து இருமுடி கட்டி நடைபயணமாக புறப்பட்டு, விஜயவாடாவுக்கு சென்று கனகதுர்க்கம்மாவை வழிபட்டனர். பெண்களின் இந்த போராட்ட வழிபாடு காரணமாக ஒரே தலைநகரத்தை வலியுறுத்தி நடைபெறும் போராட்டம் புதிய பரிணாமத்தை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி