ஆப்நகரம்

பள்ளி வகுப்பறையில் மாணவிக்கு அதிர்ச்சி அளித்த பாம்பு - மீளாத் துயரில் ஆழ்த்திய சம்பவம்!

ஐந்தாம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், பள்ளிக்கு சென்று பிணமாக வீடு திரும்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Nov 2019, 11:29 am
கேரள மாநிலம் வயநாடு அருகே சுல்தான் பதேரியில் சர்வஜனா என்ற தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஷாஹலா ஷெரின்(8) என்ற சிறுமி ஐந்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் நேற்று வழக்கம் போல் பள்ளிக்குச் சென்றுள்ளார்.
Samayam Tamil sb


பிற்பகல் 3 மணியளவில் வகுப்பறைக்குள் மாணவி ஷெரின் அமர்ந்திருந்தார். அப்போது அறையின் ஓரத்தில் இருந்த துளை ஒன்றில் விளையாட்டாக தனது காலை விட்டுள்ளார். அப்போது காலில் ஏதோ கடிப்பது போன்று உணர்ந்துள்ளார்.

சாலையில் திடீரென கொட்டிய பண மழை; கட்டு கட்டாய் அள்ளிச் சென்ற மக்கள்!

உடனே காலை வெளியே எடுத்து பார்க்கையில் காயம்பட்டு ரத்தம் வருவதைக் கண்டுள்ளார். இதுபற்றி சக மாணவிகளிடம் ஷெரின் கூறியுள்ளார். அவர்கள் வகுப்பாசிரியரிடம் தகவல் தெரிவித்தனர். அந்த காயம் பார்ப்பதற்கு பாம்பு கடித்ததை போன்று இருந்துள்ளது.

உடனே பள்ளி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து, மாணவியின் பெற்றோருக்கு சம்பவம் குறித்து கூறப்பட்டது. இதற்கிடையில் மாணவியை அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர் அங்கிருந்து தாலுகா மருத்துவமனை சென்றுள்ளனர்.

பிரதமருடன் பவார் பேச்சு: மகாராஷ்டிர அரசியலில் புதிய திருப்பம்?

அங்கு மருத்துவர்கள் அறிவுரையின் பேரில், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவி ஷெரினை அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த மாணவியின் பெற்றோர் அசிஸ் மற்றும் சஜ்னா ஆயிஷா என்று தெரியவந்துள்ளது. மாணவி ஷெரினின் இறுதிச் சடங்கு இன்று நண்பகல் 12.30 மணியளவில் புத்தன்குன்னுவில் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதிபதி ஆகிறார் 21 வயது பையன் மயங்க் பிரதாப் சிங்

இந்த சூழலில் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அடுத்த செய்தி