ஆப்நகரம்

சிவில் உரிமைகளைப் பறிக்கும் ஆதார்: உச்சநீதிமன்றம்

ஆதார் மூலம் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கும் சிவில் உரிமைகள் பறிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற விவாதத்தில் கூறப்பட்டது.

Samayam Tamil 18 Jan 2018, 12:14 pm
ஆதார் மூலம் அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு வழங்கும் சிவில் உரிமைகள் பறிக்கப்படுவதாக உச்சநீதிமன்ற விவாதத்தில் கூறப்பட்டது.
Samayam Tamil final aadhaar hearing uid threat to constitution apex court told
சிவில் உரிமைகளைப் பறிக்கும் ஆதார்: உச்சநீதிமன்றம்


ஆதார் எண் தனிமனித அந்தரங்கத்திற்கு எதிரான என்று 5 ஆண்டுகளுக்கு முன்பாக உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து இதேபோன்ற பல வழக்குகள் பதிவானதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது.

தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா, நீதிபதிகள், ஏ.எம்.கன்வில்கர், ஆதர்ஷ் குமார் சிக்ரி, சந்திரசூட், அசோக் பூஷண் ஆகிய 5 நீதிபதிகள் கொண்ட அமர்வின் முன்பு புதன்கிழமை இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜராகி வாதிட்ட ஷ்யாம் திவான், ஆதார் மக்களின் சிவில் உரிமைகளைப் பறித்து அவர்களை அடிமையாக்குகிறது என்றார்.

மேலும், மக்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியலைப்புச் சட்டம் ஓர் அரசிற்கானதாக ஆகிவிடுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். “இதைப் போன்ற திட்டத்தை வேறு எந்த நாடும் அமல்படுத்தவில்லை. ஆதார் கட்டாயமாக்கப்படுவதன் மூலம் குடிமக்கள் வாழ்நாள் முழுவதும் கண்காணிக்கப்படுகிறார்கள். ஆதார் தகவல்கள் ஒரே டேட்டா பேஸில் சேமிக்கப்படுவதால் அரசு அமைப்புகளை இத்தகவல்களை தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளது. இதனால் ஒடுக்குமுறைக்கு கருவியாக ஆதார் உருவெடுத்துவிடும் அபாயம் உள்ளது என்றும் அரசின் கைப்பாவையாக மக்களை ஆக்கும் நிலை ஏற்பட்டுவிடும்.” என்றும் திவான் வாதிட்டார்.

அடுத்த செய்தி