ஆப்நகரம்

உ.பி., மணிப்பூரில் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

உத்தரபிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்குகான இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.

TNN 8 Mar 2017, 8:25 am
உத்தரபிரதேசம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்குகான இறுதிகட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது.
Samayam Tamil final phase polling begins for assembly elections in up manipur
உ.பி., மணிப்பூரில் இறுதிகட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

#UPPolls2017: Voters queue up at polling booths 176,177,178 in Mirzapur to cast their vote in the last phase of Uttar Pradesh elections pic.twitter.com/ZfnHZPGBsh — ANI UP (@ANINewsUP) March 8, 2017 உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாகவும், மணிப்பூரில் 2 கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. உ.பி.யில் முதல் 6 கட்டங்களும், மணிப்பூரில் முதல் கட்ட தேர்தலும் முடிவடைந்த நிலையில் இன்று இரு மாநிலத்திற்கும் கடைசி கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.
#ManipurPolls2017: First time voters cast their vote at polling booth 35/41 at Athokpam Makha Leikai PO in Thoubal pic.twitter.com/uUP5UEPu0I — ANI (@ANI_news) March 8, 2017 மோடியின் வாரணாசி, பார்லி., தொகுதி மற்றும் காஜிப்பூர், ஜான்பூர் உள்ளிட்ட 40 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 22 தொகுதிகளுக்கும் கடைசிகட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி தொடர்ந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மணிப்பூரில் 1151 வாக்குச்சாவடி மையங்களும், உ.பியில் 14,458 வாக்குச்சாவடி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், உ.பி.யின் ஆலாப்பூர் தொகுதி வேட்பாளர் உயிரிழந்ததையடுத்து அத்தொகுதியில் மட்டும் வாக்குப்பதிவு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து பஞ்சாப், மணிப்பூர், உத்தரபிரதேசம், உத்தரகண்ட் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களிலும் வருகிற 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கயிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி