ஆப்நகரம்

கர்நாடகாவில் ஒருவழியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப் போறாங்க; எப்போ தெரியுமா...?

கடந்த இரண்டு நாட்களாக இழுபறியில் நீடித்து வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு முடிவுக்கு வருகிறது என்றே கூறலாம்.

Samayam Tamil 22 Jul 2019, 11:30 am
கர்நாடக மாநிலத்தில் ஆளும் மதச்சார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை திடீரென்று ராஜினாமா செய்தனர். ஆளும் கட்சிக்கு ஆதரவளித்து வந்த இரு சுயேட்சை எம்.எல்.ஏக்களும் பின் வாங்கினர்.
Samayam Tamil Kumaraswamy CM


இதனால் பெரும்பான்மை இழந்து, கர்நாடகாவில் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பாஜக தொடர் கோரிக்கைகளை முன்வைத்து வருகிறது.

இதுதொடர்பாக மூன்று முறை ஆளுநரை நாடி, வாக்கெடுப்பிற்கு உத்தரவிடக் கோரிக்கை விடுத்தது. ஆனால் அவரது உத்தரவுகளை ஆளும் தரப்பு கண்டு கொள்ளவில்லை. சட்டமன்ற விவகாரத்தில் தலையிடும் உரிமை ஆளுநருக்கு இல்லை என்று உச்சநீதிமன்றத்தை நாடியது.

கடந்த வார இறுதியில் இரண்டு நாட்களாக நம்பிக்கை வாக்கெடுப்பு மீதான விவாதம் நடைபெற்றது. ஆனால் வாக்கெடுப்பு நடைபெறாததால், ஏமாற்றம் அடைந்த பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டமன்றத்திற்குள் தங்கி தர்ணாவில் ஈடுபட்டனர்.

கர்நாடகாவில் இன்றே நம்பிக்கை வாக்கெடுப்பு - அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

இதையடுத்து வார இறுதி நாட்களை ஒட்டி, சட்டமன்றம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, கர்நாடக சட்டமன்றம் பரபரப்பான சூழலில் இன்று காலை கூடியது. இன்று மாலைக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரி, முதல்வர் குமாரசாமிக்கு உத்தரவிட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தை சுயேட்சை எம்.எல்.ஏக்கள் நாடினர்.

ஆனால் அவர்களது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க இயலாது என்று கூறி, நாளை ஒத்திவைத்தது. இந்த சூழலில் இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் இன்று நடைபெறுமா நம்பிக்கை வாக்கெடுப்பு?

இதனை குமாரசாமி அரசு நடத்துமா? அல்லது மீண்டும் தள்ளிப் போடும் வேலையில் ஈடுபடுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

அடுத்த செய்தி