ஆப்நகரம்

நிதியமைச்சர் அருண் ஜெட்லி எம்.பி-யாக இன்று மீண்டும் பதவியேற்பு!

நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

Samayam Tamil 15 Apr 2018, 12:00 pm
நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தலைமையில் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
Samayam Tamil arun
நிதியமைச்சர் அருண் ஜெட்லி எம்.பி-யாக இன்று மீண்டும் பதவியேற்பு!


மத்திய நிதியமைச்சரும், பி.ஜே.பி. மூத்த தலைவருமான அருண் ஜெட்லிக்குத் தற்போது 65 வயதாகிறது. இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்தாலும், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வாகி, மத்திய அமைச்சர் பதவியில் இருந்து வருகிறார்.


ஜெட்லியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அவர் மீண்டும் எம்.பி-யாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தமுறை உத்தரப்பிரதேச மாநிலத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து பி.ஜே.பி-யின் மாநிலங்களவைக் குழுத் தலைவராக அருண் ஜெட்லி மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, உடல்நிலை சரியில்லாததால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி சமீபத்தில் வீடு திரும்பினார். இந்நிலையில், மத்திய நிதியமைச்சர், அருண் ஜெட்லி இன்று காலை மாநிலங்களவை எம்.பியாக பதவியேற்றுக் கொள்கிறார் என நிதித்துறை அறிவித்திருந்தது.

அதன்படி இன்று காலை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுக் கொண்டார். துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அவருக்கு பதவிப் பிராமணம் செய்து வைத்தார்.

அடுத்த செய்தி