ஆப்நகரம்

சித்தூரில் திடீர் தீ விபத்து! ரூ. 2 கோடி நாசம்!

சித்தூர் டிரான்ஸ்ஃபார்மர் பழுது பார்க்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சாம்பலானது.

Samayam Tamil 30 May 2020, 11:28 am
ஆந்திர மாநிலம் சித்தூர் கிரீம் பேட்டையில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் பழுது பார்க்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார உபகரணங்கள் சேதமடைந்தன.
Samayam Tamil fire accident in chittoor


க்ரீம் பேட்டையில் உள்ள டிரான்ஸ்ஃபார்மர் பழுது பார்க்கும் நிறுவனத்தில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. ஒரு சில வினாடிகளில் சுமார் 150 டிரான்ஸ்பார்மர்கள் கொண்ட துணை மின் நிலையம் பகுதி முழுவதும் தீ பரவி டிரான்ஸ்பார்மர்கள் வெடித்து சிதறின.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்து சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

கொரோனா: மலைக்க வைக்கும் பாதிப்பு, பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா?

தீயணைப்பு துறையினர் வந்து தீயை கட்டுப்படுத்தி அணைப்பதற்குள் சுமார் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சார உபகரணங்கள் சேதம் அடைந்து விட்டன. தீ விபத்து காரணமாக சித்தூரில் மின் விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளது.

தீ விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விரைவில் இதுகுறித்து மேலதிக தகவல்கள் வெளியாகவுள்ளன.

அடுத்த செய்தி