ஆப்நகரம்

கேரள தலைமைச் செயலகத்தில் தீ விபத்து: தங்கக் கடத்தல் வழக்கு ஆவணங்கள் எரி்ந்து நாசம்?

கேரள தலைமைச் செயலக அலுவலகத்தில் இன்று தீவிபத்து ஏற்பட்டது. தங்கக்கடத்தல் வழக்கு தொடர்பான ஆவணங்களை அழிப்பதற்காக திட்டமிட்டு இந்த தீ விபத்து ஏற்படுத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Samayam Tamil 25 Aug 2020, 9:48 pm
கேரள அரசியலில் பெரும் புயலை கிளம்பியுள்ள தங்கக் கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியின் அலுவலகம் கேரள தலைமைச் செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil fire


இந்த அலுவலகத்தில் இன்று மாலை திடீரென தீவிபத்து ஏற்பட்டது. " கேரள தங்கக் கடத்தல் வழக்கின் விசாரணை அதிகாரியின் அலுவலகத்தில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது" என்று அரசுத் துறை கூடுதல் செயலாளர் பி.ஹனி தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த தீ விபத்து திட்டமிட்ட சதி என்றும், தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய ஆவணங்களை அழிக்கவே இந்த தீ விபத்து சம்பவம் அரங்கேற்றப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளன. தீ உடனே கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகவும், ஆனால் இதனை காரணம்காட்டி தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய ஆவணங்கள் அழிக்கப்பட்டுவிட்டதாக தெரிவதாகவும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

இஞ்சி, மஞ்சளுக்கு காப்புரிமை - ஒட்டுமொத்த கிராமத்தின் பெயரில் நிகழ்ந்த ஆச்சரியம்!

இந்தச் சம்பவத்தை கண்டித்து தலைமைச் செயலக வளாகத்துக்கு முன் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன் அவர் செய்தியாளர்களிடம் கூறியபோது, "மாநில அரசின் திட்டமிட்ட இந்த சதி செயல் குறித்து தடயவியல் ஆய்வுக்கு உத்தரவிட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

"தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழிப்பதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இந்த விபத்து குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என்று எதிர்க்கட்சி தலைவரான ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.

பூக்களை பறித்த தலித் சிறுமி, 40 குடும்பங்களுக்கு ரேஷன் கட்..!

கடந்த ஓராண்டாக, கேரள தலைமைச் செயலகத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை தங்களிடம் தரும்படி, தங்கக் கடத்தல் வழக்கை விசாரித்துவரும் என்ஐஏ அதிகாரிகள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர். ஆனால், இதுவரை அக்காட்சிகளை கேரள மாநில அரசு ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி