ஆப்நகரம்

43 பேரை பலிகொண்ட அதே கட்டிடத்தில் மீண்டும் தீ - என்ன நடக்கிறது டெல்லியில்?

அனாஜ் மண்டி பகுதியில் உள்ள கட்டிடத்தில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் தீப்பற்றியுள்ளது.

Samayam Tamil 9 Dec 2019, 2:21 pm
தலைநகர் டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி பகுதி உள்ளது. அங்குள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏராளமான தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு உறங்கிக் கொண்டிருந்தனர். இந்த சூழலில் நேற்று அதிகாலை திடீர் தீவிபத்து ஏற்பட்டது.
Samayam Tamil Accident


இதற்கு மின்சார கசிவு காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொழிலாளர்கள் தூங்கிக் கொண்டிருந்ததால் என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு தெரியவில்லை. தீ மளமளவென பரவியது. இதனால் ஏற்பட்ட கரும்புகையால் பொதுமக்கள் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

கர்நாடக வாக்கு எண்ணிக்கை: 7 இடங்களில் பாஜக முன்னிலை

இதுகுறித்து தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். 30 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர தீவிபத்தில் சிக்கி 43 பேர் பலியாகினர்.

காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தீவிபத்து நிகழ்ந்த கட்டத்திற்கு அருகே வசித்து வந்த மக்கள், உடனே வெளியெறியதால் தப்பித்துக் கொண்டனர்.

இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக அளிக்கப்படும் என்று டெல்லி மாநில அரசு தெரிவித்தது.

‘உங்கள் வீட்டுப் பெண்களுக்கு இப்படி நடந்தால்’ - என்கவுன்ட்டர் கேள்விக்கு தீக்கதிர் குமரேசன் கவுன்ட்டர்

இந்த சூழலில் அனாஜ் மண்டி பகுதியில் உள்ள அதே கட்டிடத்தில் இன்று காலை மீண்டும் தீப்பற்றியுள்ளது. இதனால் ஏற்பட்ட புகையால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் 4 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள் தீயை அணைக்க முயற்சித்தனர். இதையடுத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

குடியுரிமை திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்... என்ன நடக்கப் போகிறதோ?

இந்த சூழலில் அனாஜ் மண்டி தொழிற்சாலையை தடயவியல் துறை வல்லுநர்கள் இன்று பார்வையிட்டனர். அவர்கள் விபத்து எப்படி நடந்திருக்கக் கூடும் என்று ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக விபத்து நடந்த இடத்திற்கு அருகே பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகத்தின் அலட்சியமே இவ்வளவு பெரிய விபத்திற்கு காரணம் என்று குற்றம்சாட்டினர்.

அடுத்த செய்தி