ஆப்நகரம்

அட இன்னைக்கு சந்திர கிரகணமா?- எத்தனை மணிக்கு, எங்கு பார்க்கலாம்!

நடப்பாண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று இரவு ஏற்பட உள்ளது. இதனை வெறும் கண்களால் காணலாம் என்று வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 10 Jan 2020, 8:18 am
வானில் நிகழும் அதிசயங்களில் ஒன்று கிரகணம். இதில் சூரிய கிரகணத்தை விட சந்திர கிரகணம் அடிக்கடி நிகழும். சூரியனுக்கும், சந்திரனுக்கு இடையே பூமி வரும் நிகழ்வே 'சந்திர கிரகணம்' என்று அழைக்கப்படுகிறது. இது முழுமையான அளவு, பாதி அளவு, பெனும்ப்ரல் என மூன்று வகைகளில் தோன்றுகிறது.
Samayam Tamil Lunar Eclipse


இந்த கிரகணம் ஓராண்டில் பலமுறை வானில் தென்படுகிறது. நடப்பாண்டை பொறுத்தவரை நான்கு முறை சந்திர கிரகணம் நிகழும் என்று கூறப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று ஏற்படுகிறது. இன்று தெரியும் கிரகணத்தை ’ஓநாய் சந்திர கிரகணம்’ என்று நாசா பெயரிட்டுள்ளது.

கோட்டையில் ஆட்டம் கண்ட பாஜக; மண்ணைக் கவ்விய நிதின், பட்நாவிஸ்!

இரவு 10.37 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 2.42 மணி வரை கிரகணம் நீடிக்கிறது. இது பெனும்ப்ரா வகையை சேர்ந்தது. அதாவது பூமியின் நிழல் மிகவும் குறைவான அளவு மட்டுமே சந்திரனில் விழும்.

குறிப்பாக பூமியின் வெளிப்புற நிழல் மட்டும் விழும் என்று கூறப்படுகிறது. இதனையே பெனும்ப்ரா சந்திர கிரகணம் என்று அழைக்கின்றனர். இதன் காரணமாக முழுமையான சந்திர கிரகணத்தை பார்க்கும் அனுபவத்தை பெற முடியாது என்று வானியல் அறிஞர்கள் கூறுகின்றனர்.

முழுமையான சந்திர கிரகணத்தின் போது பூமியின் நிழல் சந்திரனை முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்ளும். அப்போது சந்திரன் சிவப்பு நிறத்தில் தெரியும்.

பள்ளிப் பிள்ளைகளுக்கு விதவிதமா சாப்பாடு: அசத்தும் ஆந்திர அரசு!!

இன்று நிகழும் சந்திர கிரகணத்தை இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் காண முடியும். அதுவும் வெறும் கண்களால் பார்க்கலாம். எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பது கூடுதல் அம்சம் ஆகும்.

இதேபோல் ஆசியா, ஆப்பிரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, பசுபிக், அட்லாண்டிக், ஆர்டிக், இந்திய பெருங்கடல் பகுதிகளில் கிரகணத்தை பார்க்கலாம். நடப்பாண்டில் ஜூன் 5, ஜூலை 5, நவம்பர் 30 ஆகிய நாட்களில் சந்திர கிரகணம் நிகழும் என்று கூறப்பட்டுள்ளது.

தீபிகா படுகோன்: குறை சொல்லாதீர்கள்... நீங்கள் என்ன செய்தீர்கள் - நடிகை ஜூஹி சாவ்லா விளாசல்

அடுத்த செய்தி