ஆப்நகரம்

மம்தாவை கழட்டிவிட்ட 5 எம்.எல்.ஏக்கள்.. பெங்காலில் அதிரடி காட்டும் அமித்ஷா

திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் ஐந்து முன்னாள் எம்.எல்.ஏக்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜகவில் இணைந்தனர்.

Samayam Tamil 31 Jan 2021, 12:04 am
மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகிறது. இந்த சூழலில், ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து சில தலைவர்களும், நிர்வாகிகளும் ஏற்கெனவே பாஜகவுக்கு தாவிவிட்டனர். இந்த தேர்தலில் எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டுமென பாஜக தீவிரமாக இருக்கிறது.
Samayam Tamil Amit Shah


இந்நிலையில், திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏக்கள் ஐந்து பேர் டெல்லியில் இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர். அமித்ஷா நாளை (ஞாயிறு) கொல்கத்தாவில் பல்வேறு பணிகளுக்காக திட்டமிட்டிருந்தார்.

எடியூரப்பாவின் பதவி பறிப்பு? குண்டை தூக்கி போடும் பாஜக சீனியர்!
ஹவுராவில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் நாளை அமித்ஷா பங்கேற்க இருக்கிறார். அவருடன், மேற்கூறிய ஐந்து முன்னாள் திரிணாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், அமித்ஷா திடீரென பயணத்தை ரத்து செய்துவிட்டதால் எம்.எல்.ஏக்கள் டெல்லிக்கே வந்துவிட்டனர்.

ஐந்து பேரும் இன்று டெல்லியில் இருக்கும் அமித்ஷா இல்லத்துக்கு வந்து அவரை சந்தித்தனர். மேற்கு வங்க பாஜக நிர்வாகிகள் மற்றும் அமித்ஷா முன்னிலையில் ஐந்து பேரும் பாஜகவில் இணைந்துவிட்டதாக அறிவித்தனர்.

சட்டமன்றத்திற்குள் ஆபாச படம்; வசமா சிக்கிய காங்கிரஸ் உறுப்பினர் இவர்தான்!
மேற்கு வங்க முன்னாள் வனத் துறை அமைச்சர் ரஜிப் பானர்ஜி, எம்.எல்.ஏக்கள் பைஷாலி தால்மியா, பிரபில் கோஷல், ரதின் சக்கரபர்தி, ரனகாத் பார்தசாரதி சாட்டர்ஜி ஆகியோர் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறி பாஜகவில் இணைந்துள்ளனர்.

அடுத்த செய்தி