ஆப்நகரம்

ஆழ்துளைக் கிணறில் தவறி விழுந்த குழந்தை: மீட்புப் பணி தீவிரம்!

ஆழ்துளைக் கிணற்றில் 5 வயது சிறுவன் தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 14 Jun 2021, 5:03 pm
ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் தவறி விழும் சம்பவம் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
Samayam Tamil borewell accident in up


அலட்சியம் காரணமாக உபயோகத்தில் இல்லாத ஆழ்துளைக் கிணறுகள் மூடப்படாமல் அப்படியே விடப்படுகின்றன. இதுபோன்ற கிணறுகளில் சிறு குழந்தைகள் தவறி விழுந்து உயிர்விடும் சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
பள்ளிகள் திறப்பு: முதல்வர் ஸ்டாலின் நடத்தும் ஆலோசனை!
இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறக்கூடாது என்பதற்காக மூடப்படாத கிணறுகள் அமைந்துள்ள நிலத்தின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தாலும் மக்கள் இதை கண்டுகொள்வதாக இல்லை. அரசும் சம்பவம் நடைபெற்ற சில நாள்கள் இதுபற்று நடவடிக்கை எடுப்பதாக கூறினாலும் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் கவனம் செலுத்துவதில்லை.

நாடு முழுவதும் இதுதான் நிலைமையாக உள்ளது. 2019ஆம் ஆண்டு திருச்சி அருகே சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இது போன்ற சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலம் பதேகாபாத் மாவட்டம் தாரியாயி கிராமத்தில் நடந்துள்ளது.
ஊரடங்கில் கட்டுப்பாடுகளை தொடர வேண்டும் - உயர் நீதிமன்ற நீதிபதி!
அந்த கிராமத்தில் விவசாய நிலம் ஒன்றில் 150 அடி ஆழ ஆழ்துளை கிணறு ஒன்று மூடப்படாமல் இருந்துள்ளது. அதில் 5 வயது சிறுவன் இன்று காலை 8.30 மணியளவில் தவறிவிழுந்துள்ளான். அந்த சிறுவனின் தந்தை தோண்டிய கிணறு என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து குழந்தையை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அடுத்த செய்தி