ஆப்நகரம்

கேரளாவில் வெள்ளத்திற்குப் பின், நோய்களால் 50 பேர் மரணம்

கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட நோய்களால் கடந்த இரண்டு வாரங்களில் 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

Samayam Tamil 2 Sep 2018, 9:28 am
கேரளாவில் வெள்ளத்தால் ஏற்பட்ட நோய்களால் கடந்த இரண்டு வாரங்களில் 50 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil 65639304


கேரள மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக 370 பேருக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். ரூ.20,000 கோ மதிப்பிலான சேதம் ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கானவர்களின் வீடுகள் நாசமாகியுள்ளன.

இந்நிலையில், வெள்ளத்திற்குப் பின் சீரடைந்து வரும் அம்மாநிலத்தில் தொற்றுநோய்களால் பலர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரண்டு வாரங்களில் 50 பேர் வரை இறந்துள்ளனர்.

6 பேர் லெப்டோஸ்பிரோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டு இறந்தது உறுதியாகியுள்ளது. 34 பேரின் இறப்புக்கு லெப்டோஸ்பிரோசிஸ் காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 9 பேர் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் ஒருவர் டெங்கு காய்ச்சலால் மரணமடைந்துள்ளார்.

ஆகஸ்ட் 15ஆம் தேதியிலிருந்து அந்த மாநிலத்தில் லெப்டோஸ்பிரோசிஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை உயர்வடைந்து, தற்போது 159 ஆக உள்ளது. மேலும், டெங்கு காய்ச்சலால் 104 பேரும் மலேரியாவால் 50 பேரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

அடுத்த செய்தி