ஆப்நகரம்

ஒயர்லயும், குச்சியிலயும் 1.5 கிலோ தங்கம் கடத்தல்; ஏர்போர்ட்டில் வசமாக மாட்டிய கும்பல்...!

ஒயர்லயும், குச்சியிலயும் 1.5 கிலோ தங்கம் கடத்திய நபர்களை போலீசார் கைது செய்தனர்.

TNN 5 Aug 2017, 4:59 pm
டெல்லி: ஒயர்லயும், குச்சியிலயும் 1.5 கிலோ தங்கம் கடத்திய நபர்களை போலீசார் கைது செய்தனர்.
Samayam Tamil flyers caught bringing 1 5 kg gold as wires and sticks
ஒயர்லயும், குச்சியிலயும் 1.5 கிலோ தங்கம் கடத்தல்; ஏர்போர்ட்டில் வசமாக மாட்டிய கும்பல்...!


டெல்லியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் பாங்காங்கில் இருந்து வந்த இருவரிடம் சோதனை நடத்தப்பட்டது. அவர்கள் குழந்தைகள் பயன்படுத்தும் கிக் ஸ்கூட்டர்களை கொண்டு வந்திருந்தனர். அதனை நன்கு ஆராய்ந்த போது, காலியாக இருந்த ஸ்கூட்டர் கைப்பிடியில் 4 தங்க ஸ்பிரிங்குகளை கொண்டு வந்தது கண்டறியப்பட்டது. அதன் எடை சுமார் ஒரு கிலோ. மதிப்பு ரூ.26.79 லட்சம்.

இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் உள்நாட்டு விமான முனையத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ஒருவரிடம் சோதனையிடப்பட்டது. அவர் கொண்டு வந்த தெர்மல் ப்ளாஸ்கில் சிறிய அளவிலான 93 தங்க குச்சிகள் இருந்தது. அதன் எடை 450 கிராம். அவரிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

Gold weighing nearly 1.5 kg was seized at IGI airport on Thursday by the customs department in two separate cases.

அடுத்த செய்தி